ஒரு செல்வந்தர் தனது பணப்பையை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது ஒரு ஏழை தொழிலாளி தெருவில் கண்டெடுத்ததாக ஒரு பணப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்
பையை பெற்ற காவல் ஆய்வாளர் செல்வந்தரை அழைத்து பணப்பையை கொடுத்து பணம் சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ளுமாறு கூறினார்
பணம் சரியாக இருந்தது.
ஆனால் வக்ர புத்தி படைத்த செல்வந்தர், பணம் சரியாக இருப்பதாக கூறினால் தொழிலாளிக்கு ஏதேனும் வெகுமதி தர வேண்டியிருக்குமோ என பயந்து,
"ஐயா நான் பையில் 1,60,000 வைத்திருந்தேன். தற்போது 1, 50,000 தான் இதில் இருக்கிறது. இவன்தான் எடுத்திருக்கவேண்டும். " என்றார்
தொழிலாளி பதறினார். "நான் பையில் உள்ள பணத்தை எண்ணக்கூட இல்லை. அப்படியே கொண்டுவந்தேன்"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
காவல் ஆய்வாளர் செல்வந்தரிடம் கூறினார் "அய்யா தங்கள் பையில் 1, 60,000 இருந்ததாக கூறினீர்கள் ஆனால் இந்த பையில் 1,50,000 தான் இருக்கிறது.
எனவே இது நீங்கள் தவற விட்ட பை அல்ல. இந்த பைக்கு உரியவரை கண்டுபிடிக்கும்வரை பை தொழிலாளியிடமே இருக்கட்டும்.
உங்கள் பை கிடைத்ததும் உங்களுக்கு தெரிவிக்கிறோம். சென்று வாருங்கள்." என்றார் புன்னகையுடன்.
No comments:
Post a Comment