ஒரு ஆலயம் இயங்க இந்த நால்வர் கூட்டணி இன்றியமையாதது.
இந்த நான்கு மரபும் கோயில் சார்ந்த குடிகள்.
ஒரு குடும்பம் போல் வாழ்ந்து வந்தவர்கள்.அதே நேரத்தில் தங்களுக்கான எல்லை தாண்டாது கட்டுப்பாடாக இருப்பார்கள்.
கோயிலில் ஓதுவார் விபூதி க்கூட எடுத்து தரமாட்டார்.அந்தளவு சுயக்கட்டுப்பாடோடு இருப்பார்கள்.
தங்கள் ஆலயத்திற்க்கு பக்கத்தில் உள்ள மற்ற ஆலயகளுக்கு தரிசனமாக சென்றாலும் சரி, வேறு வேலையாக சென்றாலும் இந்த நால்வர் கூட்டணி ஒன்றாகவே செல்வார்கள்.வருவார்கள்.
நீ என்ன என்னைவிட உயர்ந்தவனா, நான் என்ன உன்னைவிட தாழ்ந்தவனா என்ற போட்டி எல்லாம் கொள்ளாமல் அவரவர்கள் தங்களுக்கான தொண்டை செய்வார்கள்.
இவர்கள் வீடு கோயிலுக்கு அருகாமையிலேயே இருக்கும்.இவர்களுக்கு தனித் தனி ஊழிய மானியம் இருந்தது.அதை வைத்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றிவந்தார்கள்.
பொது ஆண்டு 1900 க்கு பிறகு கோயில் சார்ந்த இக்குடிகளிடையே பிரிவினையை மிஷனரிகள் ஏற்படுத்தினார்கள்.அதன் தொடர்ச்சியாக வேதாசலம் என்ற மறைமலைகள் தனிதமிழ் இயக்கம் என்ற பெயரில் கோயிலுக்குள் மொழி அரசியலை புகுத்தினார்.
இதனால் குருக்கள் -ஓதுவார் இடையே வேறுபாடு ஏற்படும் சூழல் உண்டாகியது.இதன் தொடர்ச்சியாக பிரமணர் -பிரமணர் அல்லாதோர் கோஷம் காரணமாக கோயிலை விட்டு படிப்படியாக பரிஜாரகர் என்ற பிராம்மணப் பிள்ளை, அத்யான பட்டர் விலகவேண்டிய சூழல் ஏற்ப்பட்டது.
பின்பு நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட கழகங்கள் கோயிலை சார்ந்தே மொழி அரிசியலை செய்ததன் காரணமாக இசைவேளாளர் குடிகளை உசுப்பேற்றி அவர்களை முற்போக்கு என்று நம்பவைத்து அவர்களையும் கோயிலில் இருந்து விலகவைத்தனர்.
பின்பு இறுதியாக கோயில் குருக்களை பார்பான் என்று கிண்டல் கேலி செய்து அவரை கோயிலை விட்டு விரட்டியது இந்த திராவிட கட்சிகள்.
கோயில் சார்ந்த குடிகள் எல்லாம் கோயிலை விட்டு விலகியதால் கோயில்கள் #பாழடைந்தது இல்லாமல், இவர்களுக்கு அளிக்கப்பட்ட #மானியங்கள் ஊர் பிரமுகர்களாலும், திராவிட அரசியல்வாதிகளாலும் கொள்ளை அடிக்கப்பட்டன.மேலும் கோயில் #சிலைகளை கொள்ளையடிக்க பாரம்பர்ய கோயில் குடிகள் இல்லாததும் வசதியாகிபோய்விட்டது.
இவ்வாறு கடந்த நூறு ஆண்டுகளில் கோயில் சார்ந்த இந்த நான்கு குடிகள் இடையே மொழி, சாதி ரீதியாக பிரிவினைகருத்துகளை ஏற்படுத்தி கோயிலை விட்டு விரட்டியதோடு, கோயில் சொத்துக்களையும் கொள்ளை அடித்ததே கடந்த ஐம்பது ஆண்டுகள் திராவிட ஆட்சியின் அவலங்கள்.
இன்றுவரை இந்த மொழி இன அரசியல் ஆலயங்களை சுற்றி சுற்றி வருவதற்க்கு இதுவே காரணம்.
சிவார்ப்பணம்.
No comments:
Post a Comment