Sunday, June 20, 2021

NEET நுழைவு தேர்வு சட்டம்.... கடைப்பிடித்தே ஆகவேண்டும்☺

 பல மருத்துவமனைகளில் நான் பார்த்ததுண்டு ...அந்த மருத்துவமனையை நிறுவியவர் நல்ல திறமையான , கைராசியான டாக்டராக இருப்பார்... அதன்மூலம் அவர் நன்றாக சம்பாதித்து அந்த பெரிய மருத்துவமனையைக் கட்டியிருப்பார் .

அதே மருத்துவமனையில் , பின்னர் அவருடைய மகனோ , மகளோ டாக்டர்களாக வருவார்கள்
..பெயருக்கு டாக்டர் என்று போட்டுக் கொண்டு எம்.டி ( மேலாண்மை இயக்குநராம் ) அறையில் உட்கார்ந்து இருப்பார்கள்... அதிகம் நோயாளிகளைப் பார்க்க மாட்டார்கள்...( வைத்தியம் தெரியாது ) குறைந்த சம்பளம் கொடுத்து சில டாக்டர்களை வேலைக்கு அமர்த்தி பாலிகிளினிக் என்ற பெயரில் ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள்...
பெரிய டாக்டர் மறைந்த பிறகு நாளாவட்டத்தில் அந்த மருத்துவமனை காணாமல் போய்விடும்... காரணம் டாக்டரின் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் காசுகொடுத்து சீட் வாங்கி படிக்க வைக்கும் வாரிசுகளின் லட்சணம் அவ்வளவுதான்...
அரசியல் கட்சிகளிலும் கூட அப்படித்தான் ...ராவுல் வின்சி , தத்தி , அன்புமணி , குமாரசாமி , உத்தவ் உதவாக்கரே , தேஜஸ்வி யாதவ் , சிராக் பஸ்வான் , அகிலேஷ் யாதவ் , உமர் அப்துல்லா போன்றவர்களெல்லாம் அவர்களின் தந்தை மட்டும் அந்த கட்சியின் தலைவராக இல்லாதிருந்தால் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆக லாயக்கற்றவர்கள்...
அதேபோலத்தான் மேலே குறிப்பிட்ட டாக்டர்களின் வாரிசுகளும் ....நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் இருந்திருந்தால் இந்த அறைகுறைகளெல்லாம் டாக்டராகியிருக்கவே முடியாது...
சிவகுமார் என்ற ( படு சுமாரான ) நடிகனின் (!) மகனாக இல்லாமல் இருந்திருந்தால் , படிப்பு மண்டையில ஏறாமல் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த சூர்யா என்ற சரவணனுக்கு சினிமாவில் லைட் பாய் வேலை கூட கிடைத்திருக்காது ...
வாரிசுகள் என்ற ஒரே தகுதியில் காலம் தள்ளும் இவர்களுக்கு தகுதியையும் , திறமையையும் வலியுறுத்தும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் கசப்பாகத்தான் இருக்கும் ....
மக்கள் உயிர் விளையாட்டல்ல ...
நீட் தேர்வு மிக முக்கியம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...