Saturday, January 15, 2022

அண்ணே தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அத தனியா எங்காயாது போய் சொல்லு, இல்ல கீழ்பாக்கம் , குணசீலம்ன்னு உங்க கோஷ்டி நிறைய சுத்தும் அங்க போய் சொல்லு
விளையாடாதீங்கண்ணே, அண்ணே நீங்க தமிழர், நானும் தமிழன் அதனால தமிழ்புத்தாண்ட கொண்டாடுங்க வாங்க‌
டேய் தமிழ்புத்தாண்டு சித்திரை 1ம் தேதிதான், அன்னைக்கு வா கொண்டாடலாம்
அண்ணே பாப்பான் சொன்னத நம்பி ஏமாறாதீங்க, அவங்க சொல்ற 60 வருஷத்துல 1 பெயர் கூட தமிழ்பெயர் இல்ல பகுத்தறிய யூஸ் பண்ணுங்க‌
அடேய் ஒரு மாசமாவது தமிழ்பெயர்ல இருக்க்குதா? உன் மூளை என்ன பியூஸ் போயிட்டுதா?
அண்ணே தமிழனுக்கு மதம் இல்ல அதனால பார்ப்பான் உள்ள வந்து அவன் கலாச்சாரத்த திணிச்சிட்ட்டான்
இப்படி பொய் சொல்லி உன்ன ஐரோப்பியனும் அரேபியனும் அவங்க மதத்துக்கு திருப்பிட்டான் அப்படித்தான?
அண்ணே அத விடுங்க தமிழ்புத்தாண்டு இன்னைக்கிதான் வாங்க கொண்டாடுவோம்
டேய் இந்த இங்கலீஸ் புத்தாண்ட மாத்துவியா?
அண்ணே அது போப்பாண்டவர் கொடுத்தது மாத்தமுடியாது
இந்த ஹிஜ்ரி புத்தாண்டு?
ஹலோ கட் த போன், கட் த போன் ப்ளீஸ்
சொல்லுடா, அதெல்லாம் மாத்துவியா?
ஹிஹிஹிஹ்
வேற எதுக்குடா இந்து புத்தாண்ட மட்டும் மாத்தணும்னு அலையிறீங்க திருந்துங்கடா
சரி வாங்க, உழவர் பண்டிகை கொண்டாடலாம் நமக்கெல்லாம் வாழ்வு கொடுக்கிறவங்க‌
அரிசி விலை ஒரு 100 ரூபாய் ஏத்தி அவங்களுக்கு வாழ்வு கொடுப்போமா?
சங்கிதனமா பேசாதீங்க, அவங்கள நாம கும்பிடனும் மத்தபடி அவங்க எப்படி போனா நமக்கென்ன?
இன்னைக்கி என்ன பிளான்?
நல்ல படம் பாக்கணும், நல்ல சரக்கடிச்சி மட்டையாகணும் அப்ப அப்ப டிவி பாக்கணும்
இதுக்கு பெயர் உழவன் திருநாள் கொண்டாட்டம்
டெபனட்லி
உழவனுக்கு வருஷம் 3 அறுவடை வரும், அதையெல்லாம் கொண்டாடுவியா? ஏன் தை மாசம் மட்டும் பொங்குற, அரிசி நெல்லுன்னு பொங்குற , இந்த தக்காளி பச்சமிளகா வெங்காயம் வாழைபழம் உருளைகிழங்கெல்லாம் ஐடி கம்பெனிகாரனா விளையவிக்கிறான் , அவங்களையெல்லாம் ஏண்டா கொண்டாடுறதில்ல?
சரி அத விடுங்க திருவள்ளுவர் பொறந்தநாளா கொண்டாடுவோம் தமிழ் சொத்து அவரு
அவர் பொறந்தது பத்தி அவர் எழுதிருக்காரா?
இல்ல‌
கல்வெட்டு செப்பேடுன்னு ஏதும் குறிப்பு இருக்கா?
இல்ல‌
பகுத்தறிவுல ஆதாரத்தோட சொல்லு, ஆதாரம் இல்லாத எதையும் நம்ப கூடாதுல்ல, சொல்லு வள்ளுவன் இப்பதான் பொறந்தாண்ணு என்ன ஆதாரம்?
அவரு எப்ப பொறந்தா என்னண்ணே, வாங்க இன்னைக்கு கொண்டாடுவோம்
ஏண்டா, வள்ளுவன் மட்டும்தான் பொறந்தானா? இந்த அப்பர் சம்பந்தர் சம்பந்தர் ஏன் அவ்வையார், இளங்கோன்னு சுமார் 500 புலவர் இங்க தேவையில்லாம பொறந்தாங்களா? அப்படின்னா சுமார் 500 புத்தாண்டு நாம கொண்டாடனும் ஓகே யா?
யோவ் வாங்குற 2 ரூபாய்க்கு ஏன் இவ்வளவு பேசுற? போய்யா சங்கி உன்கிட்ட பேசமாட்டேன்
டேய் சொல்லிட்டு போ, ஒரு மாதம் கூட தமிழ்பெயர்ல இல்லியே ஏன்?
தமிழனுக்கு காலண்டர் கிடையாது, அவனுக்கு வருஷம் கிடையாது, மாசம் கிடையாது, அவனுக்கு நாள் நட்சத்திரம் தெரியாது, அவனுக்கு ஒண்ணுமே கிடையாது அதான் ஒண்ணுமே இல்ல போதுமா?
அப்படின்னா நீங்கெல்லாம் மாட்டுபொங்கல் மட்டும் கொண்டாடுங்க, அதுதான் உங்களுக்கான பண்டிகை போ, பருத்திகொட்டையும் புண்ணாக்கும் சாப்பிட்டு இரு.. போ.. தொழுவத்துல படுத்துக்க.
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...