அனைவருக்கும் வணக்கம்
கருத்தொன்று சொல்ல விரும்புகிறேன்
தவறிருந்தால் தவிர்த்திடுங்கள்
ஏற்றுகொள்ள கட்டாயமில்லை
நாம் யார்? எங்கே இருக்கிறோம் ? என்ன செய்ய வேண்டும் ?
ஏன். எதற்கு. எப்படி
இப்படி சிந்தனை எண்ணத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்
கோவிலில் இருந்தால் சாமி கும்பிடுகிறோம்
வயலுக்கு சென்றால் வயவேலை
ஆற்றுக்கு சென்றால் குளியல்,மற்றும் மாடு குளியல்
அலுவலகம் சென்றால் அங்கு நாம் என்ன பதவியோ அதை செய்கிறோம்
இங்கே இந்த குழுவில் இருப்பது எதற்காக?
வீட்டில் இருக்கும் போது வீடு தாய் தந்தை மனைவி குழந்தைகள் போன்ற நமது குடும்பத்திலுள்ள நபர்களின் நலனில் திளைத்திருப்போம்
பொது இடத்திற்கு வரும்போது பொதுச் சிந்தனையில் மூழ்கிடுவோம்
இங்கே நமது இனத்தின் ஒறுமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தில் நாம் முத்திரை பதித்து பல அமைப்புகளின் மத்தியில் வைரம் போல் சொலிக்க வேண்டும் என்பதற்காகவும் இணைந்துள்ளோம்
நமது சிந்தனை மற்றும் பொறுப்புகள் வேறு வேறாக இருப்பினும் இந்த குழுவில் வரும்போது ஒற்றை சிந்தனையாகவே இருக்க வேண்டும் ஒருமித்த கருத்து வேண்டும்
சுதந்திர தாகம் நிறைந்த எந்த ஒரு இந்தியனுக்கும் (1947 க்கு முன்)மாற்று சிந்தனையோ மாற்று கருத்தோ எழாது ஒற்றை சிந்தனை ஒற்றை குரல்
அது சுதந்திரம் என்பதே
இங்கேயும் சிதறிக்கிடக்கும் பல அமைப்புக்கு (அமைப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்) நடுவே சிக்குண்டு சீர்குலையாமல் எழுச்சி பெற வேண்டுமானால் நாம் ஒற்றுமையாக இருப்பதுவும் நமது அங்கீரத்தை முன்னிலை படுத்துவதுமேயாகும்
அதை விடுத்து சிறு வயதில் நாம் படித்திருப்போமே !மேயப்போன காளைகளும் பிரித்து கபளீகரம் செய்ய நினைத்த மிருகமும்
அந்த நிலை வர அனுமதிக்காமல் ஒன்று பட்டு சுதந்திர தியாகி போல் இணைந்திருப்போம் கருத்தொருமிப்போம்
காலத்தை பயன்படுத்தி சாதிப்போம்
சாதனையாளர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment