ஒருவன் தன்னை விட உயரமான ஒரு பெண்ணைக் காதலித்தான். தினமும் அலுவலகம் முடிந்த பிறகு அவளை வீட்டில் விட்டுச் செல்வது அவன் வழக்கம். அவளை ஒரு நாளாவது முத்தமிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. வெகு நாட்களுக்குப் பின் தன் ஆசையை அவளிடம் சொல்கிறான். அவளும் நீண்ட நேரம் யோசித்து, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு 'சரி’ என்கிறாள். ஆனால், அவளை முத்தமிட அவன் உயரம் போதாததால், அருகில் கிடந்த ஒரு கருங்கல்லைத் தூக்கிவந்து அதன் மேல் ஏறி நின்று, அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். அவளும் வெட்கத்துடன் பெற்றுக்கொண்டு விலகுகிறாள்.
மீண்டும் நடக்கத் தொடங்குகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் அவன் 'டார்லிங், இன்னொரு முத்தம்’ என்கிறான். 'ம்ஹூம்... இன்னைக்கு இது போதும்’ என்று கண்டிப்பாக அவள் மறுத்து விடுகிறாள். உடனே கடுங்கோபத்துடன் அவன் சொல்கிறான்... 'அப்புறம் இவ்வளவு தூரம் இந்தக் கருங்கல்லை நான் தூக்கிட்டே வந்தப்ப, நீ ஏன் எதுவுமே சொல்லலை?’ - விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்!

No comments:
Post a Comment