என்னாங்க. இந்த தக்காளி என்னா விலைன்னு வாங்கினீங்க?
அதுவா... கிலோ...
ஏக விலை கொடுத்து வாங்கினீங்களா? கிலோ ஐம்பதா நூறா? உங்களப்போயி கடைக்கு அனுப்பினேன் பாருங்க. என்னச் சொல்லணும்.
அதில்லம்மா.. ஒரு கிலோ வாங்கினா..
ஒரு கிலோ வாங்கினா அம்பது ரெண்டு கிலோ வாங்கினா நூறுன்னானாக்கும். உடனே சீப்பா இருக்கேன்னு வாங்கிட்டீங்களா? ரெண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாம... அவன் சொன்னானாம் இவரு வாங்கினாராம்.
அடக்கடவுளே. நான் சொல்றதைக்கேளும்மா. ஒரு கிலோ இருபதுரூபா. மூணு கிலோ அம்பது ரூபான்னான். அதான் மூணு கிலோ.....
இத மொதல்லியே சொல்ல வேண்டியதுதான. கிலோ கிலோன்னு மென்னு முழுங்கினா நான் என்ன முக்காலமும் உணர்ந்த ஞானியா இல்ல உங்க மனசைப்படிக்கற சரவணனா?
அதில்லம்மா நான் சொல்லவரதுக்குள்ள..
ம்க்கும் நீங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள தக்காளி வெல கிலோ நூறு ரூபாய் ஆயிடும். இப்ப என்ன வீட்ல மூணு கிலோ தக்காளி சீ ப்படபோவுது. ரெண்டே பேர்இருக்குற வீட்ல எதுக்கு இவ்ளோ தக்காளி?
போனமா ஒரு கிலோ தக்காளி வாங்கினமான்னு்இல்லாம.
அதான் நான் என்ன சொல்றேன்னா.. இந்த மூணு கிலோ தக்காளியும் மேல் வீட்டு பெரியசாமிது.
நம்ம வீட்டுக்கு அரைக் கிலோ போதும்னு நான் வாங்கினது இதோ இந்தப் பையில இருக்குது பாரு போயி நல்லா கழுவிட்டு ப்ரிட்ஜில வையி.
அடக்கண்றாவியே. இப்பிடி ஏமாளியா இருப்பீங்களா? வெல சீப்புன்னா அந்தப் பெரியசாமி மாதிரி மூணு கிலோ வாங்கி ப்ரிட்ஜில போட்டு வைச்சா அதும்பாட்டுக்கு கெடக்கப்போவுது.
என்னிக்குத்தான் உங்களுக்கு புத்தி வரப்போவுதோ.
அதில்லம்மா அந்தப் பெரியசாமி மூணு கிலோ வாங்கினதும் அவங்க வீட்ல இதே மாதிரிதான் பேசவுடாத கத்தினாங்களா பேசாம இதை குப்பையில போட்டுருப்பா சுப்ரமணின்னு எங்கிட்ட கொடுத்தாரு. நான் கீழ போயி இதை குப்பத்தொட்டில போட்டுட்டு வர்ரேன். நீ நம்ம பைய உள்ள வையி.
ஏங்க அறிவிருக்குதா உங்களுக்கு? கம்முனு அந்தப்பைய உள்ள கொண்டாங்க. நம்ம வீட்டு ப்ரிட்ஜில வச்சுக்கலாம். அவுரு சொன்னாராம் இவரு கர்மச்ரத்தையா குப்பைல போடுவாராம். இப்பிடி ஒரு அப்பாவி மனுஷர நான் பாத்ததேயில்லையே கடவுளே.
இல்லம்மா அந்த பெரியசாமி கேட்டா...
கேட்டா போட்டாச்சுன்று பொதுவா சொல்லுங்க. குப்பையிலயா ப்ரிட்ஜிலயான்னு சொல்லத்தேவையில்ல.
( 20 மாடி கொண்ட பில்டிங்ல மேல்வீட்டு பெரியசாமின்னு யாருமே இல்லங்கறது வேற மேட்டரு. ! !!) இப்ப who has the last laugh?

No comments:
Post a Comment