Sunday, May 8, 2022

*மகா பாரதக் கிளை கதைகளுள் ஒன்று*

 ஒரு முறை, மயன் நிர்மாணித்த, பாண்டவர்களின் அரண்மணைக்கு வருகின்றனர் கௌரவர்கள். அனைவரும் அமர்ந்திருக்க , உணவு பரிமாறுகிறாள் திரௌபதி. துரியோதனின் அருகில் வந்து பரிமாற, அவளிடம் இன்று யாருடைய முறை? என்று நக்கலாக கேட்டான், துரியோதனன். திடுக்கிட்ட திரௌபதி, திரும்பி வந்து விட்டாள்.மனதை தேற்றிக் கொண்டு திரும்ப, பரிமாற செல்ல, திரும்ப அதே கேள்வியை கேட்கிறான்.கண்ணீருடன் பரிமாறி விட்டு, திரும்புகிறாள் திரௌபதி.

அங்கே இருந்த கண்ணன், காரணத்தைக் கேட்க,
சொல்கிறாள் திரௌபதி.சரி இப்போது செல்.அவன் அதே கேள்வியை கேட்டால், தட்சகனின் முறை! என்று சொல், என்று தேற்றி அனுப்புகிறார். மாயக்கண்ணன். .அயோக்கியன், அதே கேள்வியை கேட்க, , தட்சகனின் முறை! என்றாள். திடுக்கிட்ட துரியோதனன், அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறான்.
திரௌபதி காரணத்தைக் கேட்க, கண்ணன் சொல்கிறான்.துரியோதனின் மனைவி, பானுமதி, கற்புக்கரசி(அந்த கயவனுக்கு அப்படி ஒரு மனைவி.)கணவன் தன்னிடம் பாராமுகம் காட்டி, இச்சையின்றி இருந்ததால் வருத்தமடைந்து, ஒரு முனிவரிடம் அதற்கு உபாயம் கேட்கிறாள்.அவர் ஒரு வேரினை, அவளிடம் அளித்து, இதை அரைத்து(அந்த கால வயாகரா?)பாலுடன் கலந்து, அளித்தால் உன் கணவன், உன்னை நாடி வருவான் என்கிறார்.
பானுமதியும் அவ்வாறே, வேரின் விழுதை, பாலில் இட்டு, குங்குமப்பூ இட்டு அந்தப்புரத்திற்கு வந்த துரியோதனிடம் அளிக்கிறாள். அவன் அதை பருகாமல், பானுமதி அறியா வண்ணம், அருகில் ஊற்றி விட, அங்கிருந்த பாம்பு புற்றில் இருந்த தட்சகன் என்னும் பாம்புகளின் அரசன், அதனை குடித்து விட்டு, வெளியில் வந்து,
பானுமதியை இச்சையுடன் பார்க்கிறான்.பானுமதியை அழைக்க, அவள் பதறியபடி, கணவரை தவிர யாரையும், மனதிலும் நினையேன்! என்று! பதறுகிறாள்.
துரியோதனனும் நடந்ததை அறிந்து, மனைவியை நினைத்து வருந்தி, தட்சகனியம் மன்னிப்பு கேட்கிறான். தட்சகன் பாம்பு என்றாலும், நற்குணம் உடையவன் ஆகையால், பானுமதி வாரா வாரம், வெள்ளிக்கிழமைகளில் தான் இருக்கும் புற்றிற்கு வந்து, பால் ஊற்ற வேண்டும் என்றும், அப்போது, தவறு எதுவும் நடக்கவில்லை! என்பதற்கு சாட்சியாக துரியோதனனும், அவளுடன் வந்து, தன்னை வணங்க வேண்டும்! என்று கூற சம்மதிக்கிறான் துரியன்.இது யாருக்கும் தெரியவேண்டாம் என கேட்டு கொள்கிறான்.! என்று சொல்லி முடித்தான் கண்ணன்.
அந்த விஷயம் திரௌபதிக்கு எப்படி தெரியவந்தது? என்று குழம்பி போய்தான் வெளியேறினான் துரியோதனன்.
************************************பிறரை காயப்படுத்த நினைத்தால், தானும் காயப்பட வேண்டி இருக்கும்! என்பது தானே நியதி. ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...