Wednesday, May 11, 2022

நான் சொல்லுவேன்----

 நான்கு நாட்களுக்குள் இரண்டு இடங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

அடிப்படைக் காரணம்
பணம்,சொத்து,நகைகள்.
ஒரு தம்பதியரின் மக்கள் அயல்நாட்டில் வசிக்க ,மற்றவருக்கு
குழந்தை இல்லை.
ஊடகங்களில் வரும் செய்திகள் முதல்பக்கத்திலிருந்து மூன்றாம் பக்கத்துக்கு வந்துவிட்டன.
அடுத்தவாரம் அவரவர் வேலையைப்பார்க்கப்போய்விடுவர்
மக்கள். முதல் இரட்டைக்கொலை
ஒட்டுமொத்த பணியாளர்களின்
நேர்மையையும் கேள்விக்குரியதாக்கி
விட்டது.சகட்டுமேனிக்கு அறிவுரைகள் மக்களுக்குப்பலவிதங்களில் அள்ளிவிடப்படுகின்றன.
அதில் முக்கியமானது
வேலை பார்ப்பவர்கள் எதிரில் குடும்பவிஷயங்களைப்பேசாதீர்கள்
என்பது.நாம் பேசினாலும் பேசாவிட்டாலும் அவர்களுக்கு சடுதியில் எல்லாம் தெரிந்துவிடும்.
ஒரு வீட்டில் பணிபுரிபவருக்கு
முதலாளிக்கு எங்கே சொத்துக்கள்
இருக்கின்றன என்பது முழுவதும்
தெரியாவிட்டாலும்outlineஆவது
தெரியும்.மொத்தத்தையும் மறுப்பது
Practically impossible.
இருபது வருஷம்,14வருஷம் வேலைசெய்பவர்களின் நேர்மையை
ஒரேயடியாக சந்தேகப்பட முடியாது.
ஆனால் அவர்களின் போக்கு மாறுவதைக்கொஞ்சம் கண்டுபிடிக்கலாம்.இவ்விஷயங்களில்,பெண்வேலைக்காரர்களின் மாற்றத்தை,போக்கு மாறுவதை எஜமானர்களும்,ஆண்வேலைக்காரர்களின் குணம் மாறுவதை வீட்டின் எஜமானியும் துல்லியமாகக்கண்டு
பிடித்துவிடலாம்.
காரண காரியம் கேட்க முடியாது.
அனுபவத்தில் சொல்கிறேன்
எங்களிடம் வேலை பார்த்த ஒருவர்
டிராவலிங் செலவுகணக்கு கொடுப்பதில் 20 or 50ரூபாய் கூட்டி எழுதுவதை என்னால் கண்டுபிடிக்கமுடிந்தது. அதேபோல்
ஒரு பெண்ணுக்கு யாரிடமிருந்தோ போன் வருவதை AR.V யூகித்துக்கண்டுபிடித்து,then and there
நிறுத்திவிட்டார்.CALLER ID PHONE
வாங்கினார்.
முதல் கொலையில் அந்த ஓட்டுநர் தன் முதலாளி குறைவாகச்சம்பளம்
கொடுத்தார்,பண்டிகைக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் மட்டும் கொடுப்பார் என்று சொன்னதை ஊடகங்கள் பலவாறு பரப்புகின்றன.
அப்படியானால் இந்தக்குற்றவாளி
வேலையை விட்டு நின்றிருக்கலாமே?
அவர் தங்குவதற்கு செய்து கொடுத்த
வசதிகளையும் மறுத்துவிட்டு வெளியே போய் CALL TAXI ஓட்டிப்பிழைத்து இருக்கலாமே?
தான் நம்பிய பணியாளருக்கு ,
என்னவெல்லாம் செய்திருக்கிறோம்
என்று சொல்ல அந்தத்தம்பதி இப்போது உயிருடன் இல்லை.
அவரது குடும்பத்தினருக்கு இவர்களின்
PHONE SWITCHED OFF (அதுவும்ஆறுமணிநேரத்துக்கு) என்பதற்குப்பின்னர்தான் சந்தேகம் வந்திருக்கிறது.
இத்தம்பதியரின் மரணத்தினை
கர்மா என்று சிலர்முடிக்கலாம்.
நான் சொல்லுவேன்----
மரணத்தைவிடக்கொடியது நம்பிக்கை துரோகம்.14வருஷம் தன்னிடம் வேலைபார்த்தவன்
தன்னைத்தாக்கியபோது நிலை
குலைந்தது அவர் மட்டுமல்ல.
மனிதவாழ்வின் அறம் ,தர்மம்,மனிதம்
சாய்க்கப்பட்டு விட்டது.
இனி மீட்கப்பட்ட
ஆயிரம் பவுனில் அரைப்பவுன் கூட
இறந்தவர் குடும்பத்திற்கோ அல்லது
( அபகரித்திருந்தால்) கொன்றவன்
குடும்பத்துக்கோ சந்தோஷத்தையும்
நிம்மதியையும் அளிக்காது.
பெற்றவர்களை இழந்த மகன்,மகளும்
கைதுசெய்யப்பட்டகொலையாளியின் பதினைந்து வயது மகனும்
இந்தத்துயரில் இருந்து எப்படி மீளப்போகிறார்கள்.?
நேபாளச்சிறுவனுக்கு கொலையாளி
மகன் என்ற முத்திரை குத்தப்பட்டு
விட்டது.அவன் அப்பா செய்த கொலைக்கான தண்டனையைவிட
இந்தச்சிறுவன்இனி வாழ்க்கை முழுக்க அனுபவிக்கப்போகும்
அவமானமும் வலியும்தான் பெரிய
தண்டனை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...