Sunday, May 8, 2022

அம்மா என்பவள் நினைத்தால்தான் அக்குடும்பம் செழிக்கும்.

 ஆண்கள் அதிகம் அம்மாவை விரும்பக் காரணம் " எந்த நிலையிலும் அவர்களை ஒரு ராஜாவாக அம்மா மட்டுமே நினைப்பாள் . தனக்கு உரிமையான எந்த பெண்ணிடமிருந்தும் அவன் தாய்மையை பெரிதும் எதிர்பார்க்கிறான் காரணம் கடைசிவரை அவன் மன்னிக்கப்படவேண்டும் அவனை உயர்த்தி வைத்துக் கொஞ்ச வேண்டும் என்பதே ஆண்களின் நோக்கம். தந்தையிடமிருந்து கற்றுக்கொள்வது விட தாயிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆண்கள் பின்னாளில் பொறுப்புடன் திகழ்கிறார்கள் எத்தனையோ ஆண்கள் தனது தந்தை தாய்க்கு இறுதி கால சேவையினை எந்த சங்கடமுமின்றி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கருவறையில் இருக்கும் தெய்வத்தை முதல் படுக்கையில் விழுந்த தாயைக் கூட. உடை மாற்றும் ஆண்களும் தாய்மை உணர்வோடு இருக்கிறார்கள்..பெண்களை போகப்பொருளாக நினைத்து அடிமை செய்யும் ஆண்களை "தாய் வளர்ப்பு சரியில்லை" என்றுதான் சமூகம் முத்திரைக்குத்தும் ஆணின் எந்த நடவடிக்கைக்கும் பெரும் பொறுப்பு அம்மாவிடம் சேர்க்கிறார்கள்.

அம்மா என்பவள் நினைத்தால்தான் அக்குடும்பம் செழிக்கும்/ நிர்மூலமாகும் என்பதை இந்த சமூகம் உணர்ந்துக் கொண்டதன் விளைவே தாய்மையைக் கொண்டாடுகிறார்கள்.
பொறுப்பான எந்த உயிரும் தாய்மைக்கு சமம்❤️ தாய்மைக்கும் தாயுமானவர்களுக்கும்
வாழ்த்துகள்
❤️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...