Thursday, May 5, 2022

கல்யாணமா.. பொருட்காட்சியா???

 ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன்.

சுற்றுலா பொருட்காட்சிக்கு வந்துவிட்டோமோ என்று நினைத்தேன்.
வாசலில் அலங்காரத்துடன் யானை.
வந்தவர்களை வரவேற்க அசத்தல் மேக்கப்பில் இரண்டு இளைஞிகள். உதவிக்கு இரு சிறுமிகள். இரு மண வீட்டாருக்கும் சம்பந்தம் இல்லாமல் கேட்டரிங் காண்டிராக்டை சேர்ந்தவர்கள். யாரை பார்த்தாலும் சிரித்தார்கள். மாப்பிள்ளையின் பெரியப்பாவும் கார் டிரைவரும் அவர்களுக்கு ஒன்றுதான்.
ஜுஸ் ஸ்டால். ஞானப்பழம் தவிர எல்லா பழமும் ஒரு டஜன் மிக்ஸியில் சுற்றிக் கொண்டிருந்தது.
அனைத்து சாட் வகைகள். பெரிய முண்டாசு கட்டிக்கொண்டு பாவ் பாஜி வாலா.
பஞ்சு மிட்டாய்... மெகந்தி, வளையல் ஸ்டால்கள்.
மூன்று வகை ஸ்வீட்ஸ்.. இரண்டு வகை ஐஸ் க்ரீம்.
ஒரு மேடையில் கிளி ஜோசியம் மற்றும் கிராமத்து உடையில் காதில் தொங்கட்டானுடன் குறி சொல்லும் பெண்.
தலைப்பாகை கட்டிக்கொண்டு பீடா தருபவர்.
ரங்கா ராட்டினம் இடம் இருந்தால் வைத்திருப்பார்கள்.
இதையேல்லாம் கொரித்துவிட்டு உள்ளே போனால் வரிசையாக தொட்டியில் அனைத்து மாநில உணவுகள். தலையில் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் தொப்பி அணிந்து உணவு பரிமாறுபவர்கள்.
எல்லா உணவு பாத்திரங்களும் ஐடி கார்டு போட்டுக்கொண்டு இருந்தது.
நாண் அடுப்பை சுற்றி சில பெண்கள். ஏதோ நாளைக்கு வீட்டில் செய்யப்போவது போல சிரத்தையுடன் சமையல் குறிப்பு கேட்டார்கள்.
எடை பார்க்கும் மிஷின் கலர் கலர் விளக்குடன் இருந்தது. ஒரு வேளை சாப்பிடும் முன்பு எடையை பார்த்து சுதாரித்து கொள்வற்காக இருக்கலாம்.
அட்டகாசமான திருமண ஹால். மணப்பெண்ணை தவிர எல்லோரும் தலை குனிந்தபடி இருந்தார்கள். வேறு என்ன செல்போனில் பிஸி.
மேடையில் குஜராத் அல்லது ராஜஸ்தான் பாரம்பரிய உடைகளில் மணமக்கள். அவர்கள் பெற்றோர்கள் தமிழ்நாடு தான்.
எல்லா இடங்களிலும் ஆடம்பரம் தெரிந்தது.
மணமக்களை பார்த்தேன். ஏதோ ஒரு விஷயம் குறையாக தெரிந்தது.
கண்டுபிடித்து விட்டேன். மணமக்கள் கழுத்தில் மாலை இல்லை.
ஆடம்பரத்தில் அவசியம் மறைந்து அல்லது மறந்து போய்விட்டது.
கழுத்தில் மாலை இருந்தால் தான் மாப்பிள்ளை என்று சொல்வார்கள்.
நல்ல வேலை தாலி கட்டும் சடங்கு உண்டு என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.
வாழ்க நலமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...