"இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்” - திருமாவளவன்.
ஏற்கனவே ஏற்பட்டு விட்டதே..ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்க ராஜபக்சேவுக்கு போர் ஆயுதங்களை வழங்கிய மத்திய ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியா முழுமைக்கும் துடைத்தெறியப்பட்டு விட்டது. ராஜபக்சேவின் கொலைப்பசிக்கு தமிழர்கள் இறையாக உடந்தையாக இருந்த இந்தியாவிலுள்ள திமுகவுக்கு இலங்கையில் ஏற்பட்ட நிலைமை விரைவில் ஏற்படும் அதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுகவை அழிக்க திருமா விரும்புகிறார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால்
2016 சட்டமன்றத் தேர்தலின் போது வைகோவும், திருமாவும் ஈழத்தமிழர்களை அழித்தொழித்த காங்கிரஸையும், திமுகவையும் பூண்டோடு அழிப்பதே லட்சியம் என்று முழங்கியது மறந்து விட்டதா? குடும்ப ஆட்சி
தமிழர்கள் வாழ்வுரிமை, நேர்மை, நியாயம், கொள்கை, லட்சியம் லஞ்சம், ஊழல், சாராயம் என்று 2016 ல் இவர்கள் பேசியதை இனி ஒருமுறை மறுபடியும் கேட்டால் நாஞ்சில் சம்பத் பாணியில் துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.ராஜபச்சேவின் குடும்ப ஆட்சிக்கு மக்களே முற்றுப்புள்ளி வைத்தது போல திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2016ல் முழங்கியதை நினைவு படுத்த மறைமுக எச்சரிக்கை விடுக்கிறார் திருமா என்பதே சரி.
எத்தனை காலம் தாம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
சத்தியம் தவறாத .....? ?
உத்தமர்கள்.
No comments:
Post a Comment