Saturday, May 7, 2022

பந்தி சாப்பாடு.

 இரண்டு நாட்களுக்கு முன்பு அறுபது வயது நிறைவு (சஷ்டி அந்த பூர்த்தி) விழாவிற்கு சென்றிருந்தேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
மேடையில் என்ன நடக்கிறது என்று யாரும் கவனிப்பதில்லை. செல்போன் பார்த்துக் கொண்டோ அல்லது குழுவாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.
மணமக்கள் வயதானவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.
சரி தலைப்பை கவனிப்போம்.
டைனிங் ஹாலில் நம் விருப்பப்படி உட்கார முடியாது. வரிசைப்படி தான் உட்கார வேண்டும்.
பந்தியில் டம்ளர் வைத்து குடிதண்ணீர் ஊற்றும் வழக்கம் கைவிடப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறிய பாட்டில் தண்ணீர் தான். மிளகாயை தவறுதலாக கடித்தாலும் எக்ஸ்ட்ரா பாட்டில் தரமாட்டார்கள்.
புரோகிதர்கள் சொன்ன மந்திரத்தையே திரும்ப திரும்ப சொல்வது போல ஒரே மாதிரி மெனுதான்.
ஒரே ஒரு சொட்டு பாயசம், அரை ஸ்பூன் தயிர், பழ பச்சடி. பருப்பு உசிலி, அவியல், ஒரு பொரியல்.
ஆமை ஓடு வடை, இரண்டு ஸ்லைஸ் வருவல் மற்றும் சிறிய பிளாஸ்டிக் ஸ்பூனும் ஐடெக்ஸ் மை டப்பா போல் ஒன்று இருந்தது.
மை டப்பா எதற்கு என்று கையில் எடுத்து பார்த்துக்கொண்டு இருந்த போது பக்கத்தில் இருந்தவர் அது பாதாம் அல்வா என்றார். திறந்தால் அமிர்தான்ஞன் போல் கொஞ்சமாக இருந்தது.
வழக்கமாக இல்லாமல் உருளைக்கிழங்கு பொரியல் பஞ்சு போல் லேசாக இருந்தது. பரிமாறுபவர் என்னிடம் உ.கிழங்கை வேகவைத்து பிறகு எண்ணெயில் பொரித்து மறுபடியும் வாணலியில் கலக்க வேண்டும் என்று சமையல் குறிப்பு சொன்னார். நான் தான் வீட்டில் சமையல் செய்வதாக நினைத்து இருக்கலாம்.
குழந்தைகள் சாப்பிட்டு விட்டு எழுந்திருக்காமல் சிறிய பிளாஸ்டிக் ஸ்பூனின் ஜோடி ஏன் வரவில்லை.. அதாவது ஐஸ் கிரீம்...என்ற முகபாவத்தில் இருந்தார்கள்.
அந்த ஸ்பூன் அமிர்தாஞ்சனம்... மன்னிக்கவும்.. பாதாம் அல்வா சாப்பிட வைத்தது என்று பதில் வந்தது.
நான் மோர் கேட்டதும் கான்ட்ராக்டர் சூப்பர்வைசர் எங்க மெனுவில் மோர் எப்பவும் கிடையாதே என்றார். மீதமான சாதத்தை வீணாக்க மனசில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்த போது ஒருவர் தயிர் ஊற்றினார்.
அதாவது பாதாம் அல்வா மற்றும் தயிர் வழங்கும் பெரிய கேட்டரிங்காம்.
தாம்பூலப்பையில் ஏழை, பணக்காரர், லட்சாதிபதி, கோடிஸ்வரர் என்று வகைகள் எப்போதும் உண்டு.
ஏழை தாம்பூலப்பை ஆண்களுக்கு தரப்படும். அதில் சுமார் தேங்காய், வெற்றிலை பாக்கு மட்டும் இருக்கும்.
மீதி வகைகள் பெண்களுக்கு மட்டும்.
பணக்கார பையில் மேலே சொன்ன பொருட்களுடன் ஒரு லட்டு, முறுக்கு அல்லது மிக்சர் பாக்கெட்.
லட்சாதிபதி பையில் கூடுதலாக எதாவது டப்பா, காஞ்சி பெரியவர் போட்டோ, ஜாக்கெட் துணி இருக்கும்.
கோடிஸ்வரர் தாம்பூலப் பையில் கூடுதலாக பெரிய சைசில் பட்சணங்கள் மற்றும் பணமும் இருக்கும்.
பெண்கள் வைத்திருக்கும் தாம்பூலப்பை அவர்களின் முக்கியத்துவம் எந்த பிரிவில் வருகிறது என்று சொல்லும். இதை கண்டித்து கமென்ட்கள் வரும்.
பைகளை ஒரே இடத்தில் ஆட்களுக்கு தகுந்தாற்போல் வழங்குவார்கள். அருகில் நிற்கும் உறவினர் செய்யும் சைகையை புரிந்து கொண்டு கொடுப்பார்கள்.
எதற்கு இந்த பாகுபாடு என்பது புரியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...