Thursday, May 12, 2022

எழுதலாமா வேண்டாமா பல கேள்விகள் இன்று எழுதலாம் என முடிவெடுத்தேன்.

 10 தினங்களுக்கு முன்பு பிரசித்தி பெற்ற கோயில் பெயரை சொல்லி ஒருவர் போன் செய்திருந்தார்

25 வருடங்களாக பரிகார பூஜைகள் செய்து வருவதாகவும் விடிக்கையாளர்களை ஏதாவது ஒரு தோஷம் என சொல்லி அனுப்பி விடுங்கோ
ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் பூஜை முடிந்ததும் உங்கள்
ஜீ பே எண்ணுக்கு அனுப்பி விடுகிறேன் 10 ஆயிரத்துக்கு 3 ஆயிரம் என சொன்னார்
எனது பெயரை குறிபபிட்டு உங்கள் லெட்டர் பேடில் எழுதி அனுப்புங்கள் என்றார்
நான் உடனடியாக மறுத்து விட்டேன் எல்லோரும் செய்யும் தவற நான் செய்ய மாட்டேன்
குலதெய்வத்த மீறின சக்தி எதுவும் கிடையாதுனு அடிச்சு சொன்னேன் இந்த மாதிரி பேசுண்டு இருந்தா எப்படி பணம் சம்பாதிப்பீர் என்றார்
தேவையில்லாத பரிகாரத்த சொல்லி பயமுறுத்தி பணம் சேமிக்கணுனு எனக்கு அவசியம் இல்லேனு சொன்னேன் போன்கால் துண்டிக்கப்பட்டது
ரெகார்டு வாய்ஸ் வைத்திருக்கிறேன் கோயில் பெயர் அவரின் பெயர் குறிப்பிட்டுள்ளதால் அந்த பேச்சுகள் அடங்கிய மெசேஜை குழுமத்தில் அனுப்பவில்லை நம்மால் ஒருவர் பாதிப்பு அடைந்து விடக்கூடாது
இதுபோன்ற போன்கள் நிறைய வருகிறது சற்று புகழ் அடைந்துவிட்டாலே நம்மை நாடுவார்கள் ஒருசிலரை தவிற பெரும்பாலான ஜோதிடர்கள் இதில் விழுந்து விடுவார்கள் அப்புறம் என்ன பரிகாரம்தான் கோயில் கோயிலாக சுற்ற வைப்பதுதான் பலன் பூஜியம்
ஆண்டாண்டுகாலமாக நடக்கற விஷயத்த நம்மால மாத்த முடியாது
முடிஞ்சளவுக்கு நாம ஒழுக்கமா இருப்போம்
எல்லாம் அவன் செயல் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...