Tuesday, June 14, 2022

லட்சுமி குபேர விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் தெரியுமா?

லட்சுமி குபேர விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் தெரியுமா?
லட்சுமி குபேர பூஜை


















அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

வெள்ளிக்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான உடையை உடுத்தி நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும்.

படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காமல், சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு செம்பு வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வெச்சு, சுற்றிலும் மாவிலையைச் சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் எல்லாவற்றையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள்.

மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்திரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும் எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப் படவேண்டாம். மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.

பின்பு தூப, தீபம் காட்டி வாழைப்பழம், பசும் பால், பாயாசம் என்று உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும்.

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...