Sunday, June 19, 2022

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழக ம்.இப்போது இதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை.

 ஆண்களுக்கு தற்போது மணப்பெண்கள் கிடைப்பது அரிதாக உள்ளது என பரவிவரும் செய்தி.அந்த காலத்தில் மாப்பிள்ளை கிடைப்பது கல்யாண மார்க்கெட்டில் ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்குவதாக இருந்தது.இப்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதற்க்கான காரணங்கள் பலவாறாக சொல்லப்படுகிறது. முன்நாளில் பெண்களை பாதுகாப்புடன் வளர்த்தார்கள். கட்டுப்பாடு கள் நிறையவே இருந்தது. பத்தாவதுவாகுப்பு தாண்டுவதே பெரிய சிரமம். பாரதியின் பெண் விடுதலை ஓங்கி ஒளித்துக்கொண்டிருந்தகாலம். பெண்கள் தற்போது வசதி படைத்த பெண்கள் பெரியபடிப்பெல்லாம் படித்து புருஷன் என்கிற இரவல் கால்களில் நிற்காமல் சொந்தக்கால்களில் நிற்கிறார்கள். இது நல்லதுதான். ஆணோ பெண்ணோ யாரும் யாருக்கும் அடிமையில்லை.இந்த கான் செப்ட் ஆரம்பக்காலம் நன்றாகத்தான் இருந்தது.வர வர ஈகோ தலை தூக்கியதுதான் தான் மணவாழ்க்கை தோல்வியடைய ,காரணம்.புதுமைப்பெண்கள் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாய் பீடுநடைப்போட்டு பாரதி கனவை நினைவாக்கினார்கள். ஆண்கள் நான்தான் குடும்பத்தலைவன் என்று திமிறிக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலை ஏற்க்கொண்டார்கள். போப்போக யார் பெரியவர் என்றக்கேள்வி எழத்தொடங்கிய போதுதான் நீதிமன்றத்தித்தில் விவாகரத்து கேசுகள் குவிய தொடங்கின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...