தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு, அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு,தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்புத்தெரிவித்தார். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் ஸ்டாலின் விரும்பினார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்திருந்த தடை விலக்கி கொள்ளப் பட்டது; திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்தது.இதன் அடுத்த கட்டம் குறித்து, தருமபுர ஆதீன மடம் வட்டாரங்கள்
கூறியதாவது: தமிழக அரசுக்கும், ஆதீனத்துக்கும் இடையே நெருடல் உள்ளது. இது, நீக்கப்பட வேண்டும் என, தி.மு.க., தரப்பில் சிலர், ஆதீனத்தை சந்தித்து வலியுறுத்தினர். அதற்கு ஆதீனமும் சம்மதம் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அறநிலைய துறை
அமைச்சர் சேகர்பாபுவை தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க அனுப்பினார்.முதல்வர் தெரிவித்த கருத்துக்கள், ஆதீனத்திடம் தெரிவிக்கப்பட்டன; அவரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதன்பின், தருமபுர ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'ஆகஸ்ட்டில் தருமபுரம் ஆதீன கல்லுாரியின் பவள விழா நடக்க உள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என, தருமபுரம் ஆதீன மடம் விரும்புகிறது' என்றுகூறினார்.இவ்விஷயம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இணக்கமாக செல்ல வேண்டும் என விரும்பும் முதல்வர் ஸ்டாலினும், ஆதீனத்தின் விருப்பத்தை ஏற்றார்.
கடந்த, 15ம் தேதி, முதல்வரின் துாதுவராக அமைச்சர் மெய்யநாதன், தருமபுரம் ஆதீனத்தை
சந்தித்தார். அப்போது, தருமபுரம் ஆதீன கல்லுாரியின் பவள விழாவுக்கு, முதல்வருக்கான அழைப்பு கடிதத்தை அமைச்சர் மெய்யநாதனிடம் ஆதீனம் வழங்கினார். அத்துடன், கல்லுாரி பவள விழா அழைப்பிதழும், முதல்வரிடம் சேர்க்கப்பட்டுள்ளது.பவள விழாவில் முதல்வர்
பங்கேற்பது உறுதியானது தான். திட்டமிட்டபடி முதல்வர் வந்து சென்றால், அரசு மற்றும்
தருமபுரம் ஆதீன மடம் இடையே நிலவி வந்த நெருடல் முழுமையாக நீங்கி விடும்.இவ்வாறு ஆதீன மடம் வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment