பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை. தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்.
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது.
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்.விதியின் பலன் இல்லையென்றாலும் முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு.
நூறு முறை சம்மட்டியால் அடிக்கப்பட்ட ஒரு பாறை பிளவுபடுகிறது என்றால், அது அந்த கடைசி ஒரு அடியினால் உடைந்தது அல்ல.
அதற்கு முன் அந்த பாறையை அடித்த ஒவ்வொரு அடிக்கும் அதில் பங்குண்டு.
வாழ்க்கைக்கு வழிதேடுங்கள் வாய்ப்புகள் வந்து சேரும்.பயிற்சியை பாடமாக்குங்கள் பட்டங்கள் பரிசளிக்கும். தடைகளைத் தகர்த்தெறிங்கள் தன்னம்பிக்கை தலைதூக்கும்.
முயற்சியை முதிர்ச்சியாக்குங்கள் முன்னேற்றம் முடிசூடும்.
விவேகத்தை விதையாக்குங்கள் வெற்றிகள் விழாக்காணும்.
No comments:
Post a Comment