'என்னை சந்திக்க வருவோர், மலர் கொத்து, பொன்னாடை, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்கவும். எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால், ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் வயதானோருக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். 'அதேபோல, என்னை சந்திக்கும் போது காலில் விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, திருவாய் மலர்ந்திருக்கிறார்.
பூனை தன் கண்ணை மூடினால், உலகமே இருண்டு விட்டதாக நினைத்து கொள்ளுமாம். அதைப்போல உள்ளது சசிகலாவின் கூற்று.அவருக்கு துதி பாடும் 'ஜால்ரா'க்கள் வேண்டுமானால், அவரின் காலில் விழுந்து வணங்குவதுடன், பாத பூஜையும் செய்வர். ஆனால், எம்.ஜி.ஆர்., வழி வந்த எந்த ஒரு தன்மானமுள்ள தொண்டனும், இது போன்ற இழிவான காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டான்.
ஒரு நேரத்தில் சாதாரண 'வீடியோ' கடை வைத்திருந்தவர் சசிகலா; ஜெயலலிதாவின் நட்பு கிடைத்ததும், அவர் கூடவே இருந்து அவருக்கு குழி பறித்து, தன் குடும்பத்திற்கு பல தலைமுறைக்கு தேவையான அளவுக்கு சொத்துக்களை சேர்த்ததை தவிர, வேறு எந்த சாதனைகளையும் அவர் செய்யவில்லை. அவரது அக்கா மகனும், அ.ம.மு.க., தலைவருமான தினகரன், ஒரு காலத்தில் பஸ்சில் பயணிக்க கூட வசதியில்லாமல், எங்கும் பொடி நடையாக நடந்து சென்று வந்தவர். இன்று அவர்கள் குடும்பமே கோடிகளில் புரண்டு தவழ்கிறது.
ஒருவேளை சசிகலாவை யார் மன்னித்தாலும், ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. சசிகலா அனகோண்டா ரகத்தைச் சேர்த்தவர். அவர் காட்டும் பீலாவை நம்பி, ஒருவேளை அவரை அ.தி.மு.க.,வில் சேர்த்தால், கட்சியை விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்.
எனவே, அ.தி.மு.க., மூத்த தலைவர்களும், தொண்டர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சசியை நினைக்கும் போது, 'நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு, அவர் பேர் மனிதரல்ல...' என்ற, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
சரியான வேட்பாளரை தேர்வு செய்யுங்க மோடி!
No comments:
Post a Comment