கலைஞர் பத்திரிகைகளுக்கே பூணூல் போட்டு விடுவார்.
அப்படி அவர் பூணூல் போட்ட பத்திரிகைதான் The Hindu.
அதை நடத்தியது திரு கஸ்தூரிரங்க ஐய்யங்கார்.
The Hindu , Authentic என்று விளம்பரம் செய்வார்கள்.
அநேகமாக அதைப் படிக்காத பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். எல்லா அப்பாமார்களும் காலைல எழுந்த உடனே ஹிந்து பேப்பர் படிடா என்பார்கள். வெறுமன ஸ்போர்ட்ஸ் காலம் மட்டும் பார்த்துட்டு விட்டுடாதே. எல்லாவற்றையும் படி என்பார்கள்.
அதன் தலையங்கம் நடு நிலையுடன் நல்ல ஆங்கிலத்தில் இருக்கும்.
ஜி கே ரெட்டி போன்றவர்கள் எழுதிய ஆங்கிலம் நல்ல தரமாக இருக்கும். அவர்களுடைய செய்தி அலசல்
அருமையாக
இருக்கும்.இன்றைய சென்ஷேஷனல் நிலை அன்று கிடையாது.
ஹிந்துவில் ஒரு செய்தி வந்தால் அது கண்டிப்பாக சரியான செய்தி ஆக இருக்கும். அந்தச் செய்தியை இரண்டு அல்லது மூன்று நாள் ஆய்வு செய்து உண்மைத் தன்மையை அறிந்த பின்தான் வெளியிடுவார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸில் முன்னாடியே வந்து விடும். ஆனால் ஹிந்து தங்கள் கொள்கைகளிலிருந்து விலக வில்லை.
காலையில் எழுந்து காபி குடித்து விட்டு ஹிந்து படிக்கவில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததாகத் தெரியாது. எதையோ அன்று இழந்து விட்டது போல் இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் Magazine பல துறைகள் பற்றிய செய்திகளுடன் வரும்.
அதில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி நல்ல ஆங்கில வார்த்தைகள் கற்க உதவும்.
போஃபர்ஸ் ஊழலை வெளிக் கொணர்ந்தது ஹிந்துதான்
கொசுறு - அதன் முதல் நிருவனர் திரு சுப்பிர மணிய ஐயரிடம் திரு காமராஜர் தன்னிடம் மக்கள் கொடுக்கும் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அந்தப் பணத்தில் வாங்கியதுதான் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம். ஹிந்து ஒரு சுதந்திர இயக்கப் பத்திரிகையாகத்தான் ஆரம்பிக்கப் பட்டது.
ஆனால் ஹிந்துவின் இன்றைய நிலைமை தலை கீழ்.
No comments:
Post a Comment