( ஓர் முழுமையான ஆத்மானுபவ பயணம் !! வாங்க பயணிப்போமா ?? )
முதல் நாளே சென்று தங்கிவிட்டாலும் !! தனுஷ்கோடி !! அரிசல் முனை !! என்று பயணம் செய்து இயற்கையின் எழிலை அனுபவிக்க தோன்றியது !!
இரவு அங்கே இருக்கும் நம் உறுவுகள் இல்லம் சென்று அவர்களோடு உணர்வாட தோன்றியது !!
இரவே ஆலயம் போவோம் என்று ஏனோ தோன்றவில்லை !!
மாறாக காலையில் வா என்றே ஓர் அக கட்டளை .
எப்போதும் எதிலும் முழுமையாக ஈடுபடுவதே எம்மை வழிநடத்த ஆட்கொள்பவன் கருணை என்பதால் அரைகுறையோடு எதையும் செய்வது இல்லை !! அப்படி செய்ய நேர்ந்தால் அங்கே போவதே இல்லை என்பதே இவனை அவன் கையாளும் வழி என்பதால் !!
நாம் வருகிறோம் என்றவுடன் தங்க இடம் ஏற்பாடு செய்து !! உணவை தகுந்த நேரத்தில் தயார் செய்து கொடுத்து !! பத்துவருடம் முக்நூலில் மட்டுமே இவனோடு பயணிக்கும் உறவு வழியே இறைவனே செய்யா !!
காலையில் எல்லா ஏற்பாடுகளும் செய்து விடுகிறேன் !!
என் நண்பரையும் கூடவே அனுப்புகிறேன் !!
நீங்கள் எழுந்தவுடன் சொல்லுங்கள் !! உங்களை காரை இங்கேயே விட்டுவிட்டு ஆடோவில் போக அதையும் ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்று சொல்ல !!
நினைக்காத ?? தீர்மானிக்காத ?? அவனால் மட்டுமே திட்டமிட்ட பயணம் என்பது இது !!
எப்படி நம்மை கூடி செல்கிறான் என்று அனுபவிப்பது மட்டும் இவன் வேலை ..
காலையில் வழக்கம்போல் 5 மணிக்கு விழிப்பு !! அப்படியே வெளியே காலாற ஓர் நடை !! ஓர் தேநீர் !!
மீண்டும் அறைக்கு வந்து !!
கண்மூடி சிறிது நேரம் !!
மனதளவில் ஓர் தாயப்படுத்த ..
நாம் செல்லும் ஆலயம் இந்த பாரதநாட்டின் அனைத்து மக்களும் வந்து செல்ல கூடிய ஓர் ஆலயம் !!
வாழ்பவர்களுக்கு ஓர் ஆத்மநிறைவும் !!
வாழ்ந்தவர்களுக்கு ஆத்மசாத்தியும் !!
வாழ இருப்பவர்களுக்கு ஓர் வழிகாட்டலும் அருளும் ஆலயம் !!
புராண !! இதிகாசங்கள் !! பொய்யில்லை என்று உணர்விக்கும் சாட்சியாய் விளங்கும் ஆலயம் !!
தேவர்கள் !! மூவர்கள் !! ரிஷிகள் !! முனிகள் !! சித்தர்கள் !! போன்ற எண்ணற்றவர்கள் தரிசித்த !! தரிசித்துக்கொண்டு இருக்கும் ஆலயம் !!
எம்மையாளும் அம்பலத்து அர்ச்சனை பூமியில் உள்ளோரும் உணர அனுபவிக்க தவம் புரிந்த பதஞ்சலியார் ருத்ராச்சா பந்தலில் இருக்க அவர் அடியின் கீழே அவ்வருளாளர் உறைந்திருக்கும் ஆலயம் !!
இங்கே !! இன்று !! நம் வர !! இருக்க !! தரிசிக்க !! பிரவேசிக்க !! அவன் தீர்மானித்து ஈர்த்து வந்திருக்கிறான் !!
என்னே அவன் கருணை அனுபவிக்க சஞ்சலம் இன்றி தயார் ஆவோம் என்று ..
தீர்த்தம் ஆடி உடுத்த துணி !! செலவுக்கு பணம் !! செல் போன் !! போன்ற எதையும் நம்மோடு வந்த ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு !! எதிலும் கவனச்சிதறல் ஏற்படாத வண்ணம் கிளம்புகிறோம் !!
அறையை விட்டு வெளியே வர அந்த உறவு !! நான் அழைக்காதே தயாராக !! நம்மை அழைத்து செல்பவரும் தயாராக !! நம் பயணிக்க இருக்கும் ஆட்டோவும் !! தயராக ...
பேச ஒன்றுமில்லை !! அப்படியே ஏறி அமர்ந்து ..
அக்கினி தீர்த்தம் என்ற கடற்கரையில் இறங்கி பயணிக்கிறோம் ..
நம்மை இப்பூமிக்கு கொண்டுவந்து !! நாம் வருவதற்க்கு முன்னே வந்து !! நமக்கதை தம்மால் முடிந்தவரையில் செய்த பித்ரு ( முன்னோர்களுக்கு ) பிண்டம் இட்டு !! நன்றி சொல்லி !! வழிபட்டு !! அக்கினி தீர்த்தில் நீராடி விட்டு வெளியே வர !! மீண்டும் வாருங்கள் ஓர் தேநீர் என்று அழைத்துவந்தவர் உடன் ஓர் தேநீர் !!
அதை குடித்து முடிக்கும் முன்னமே ..
வாங்க ஆலயத்துள் 22 புனித நீர் ஆடலாம் !! என்று எம்மை அழைத்து சென்று நீராட வைத்து !! உடைமாற்றும் வரை பொறுத்து !! ஆலய தரினத்துக்கு கூடி செல்ல வேண்டியவர் வந்துவிட்டார் !!
என்னை அழைத்து வந்தவர் இவர் இனி உங்களை அழைத்து செல்வார் !! வரும்போது ஓர் ஆட்டோ பிடித்து நீங்கள் அறைக்கு வந்துவிடுங்கள் என்று கூறிவிட்டு !! உங்கள் நண்பர் அவருக்கு தரவேண்டியதை எல்லாம் கொடுத்து விட்டார் !! நீங்கள் ஏதும் தரவேண்டாம் !! என்ற அன்பு கட்டளையோடு விடைபெற்று கொண்டார் ..
இனி அவர் வாருங்கள் என்று கோயிலின் வடக்கு வாசல் வழியாக !! எங்கள் செருப்பை கூட எங்கே விட வேண்டும் என்று கூட சொல்லி !! அவ்வளவு கூட்டத்திலும் எம்மை பொறுமையாக அழைத்து செல்கிறார் !!
எனக்கான தீர்த்தம் ஆடும் சீட்டு எல்லாம் அவரே வாங்கி அழைத்து செல்கிறார் !! நான் வருகிறேனா என்று ஒவ்வொரு இடத்திலும் நின்று பொறுமையாக பார்த்து பார்த்து அழைத்து செல்கிறார் !! எனக்கு அங்கே பேச !! கேட்க !! நினைக்க !! ஏதுமில்லை !! மானசீகமாக ஒவ்வொரு உயிரிலும் கலந்து இருந்து அழைத்து செல்பவனை அனுபவித்துக்கொண்டே இருக்க !!
22 தீர்த்தத்திலும் ஒவ்வொரு வாலி நீரை இறைத்து தலையோடு ஊற்றுகிறார் !! என்னோடு என் கழுத்தில் இருக்கும் ருத்திராச்சமும் அதில் உள்ள அம்பலவானரும் தீர்த்தம் ஆடுவதை அனுபவித்து மகிழ்கிறேன் !! ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சுவை தன்மை ..
எல்லாம் நீராடி முடித்து !! ஈர உடையை மாற்றி !! அடுத்த உடையை அணியும் வரை காத்திருந்து !!
" வாங்க ராமநாதரை தரிசிக்கலாம் " என்று அழைத்து சென்று !! ராமநாத பெருமான் முன்னே இருத்தி !! நன்றாக தரிசித்துக்கொள்ள்ளுங்கள் என்றும் சொல்லி !! அங்கே இருக்கும் அந்தணரிடம் நமக்கு வேண்டியவர்கள் தீபாராதனை காட்டுங்கள் என்றும் சொல்லி காட்டி !! அவ்வளவு கூட்டத்திலும் எம்மை பொறுமையோடு இருத்தி தரிசிக்க செய்து !!
அடுத்து
" வாங்க 51 சக்தி பீடங்களில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த எந்திரம் உள்ள பீடம் இது என்றும் சொல்லி " அழைத்து சென்று அம்பாள் முன்பும் நிறுத்தி !! வணங்க செய்து !!!
வெளியே கூட்டி வந்து நல்ல திருப்தியா என்று கேட்டார் !! நானும் பணம் கொடுக்க அவர்கள் கொடுத்துவிட்டார்கள் என்று மறுக்க !! அந்த பொறுமையும் !! நிதானமும் !! அழைத்துச்சென்ற விதத்துக்கு என்னால் முடித்த காணிக்கை என்று கொடுத்துவிட்டு !! அவரை அனுப்ப ..
நேராக பார்த்தால் பிரபஞ்ச பேரரசன் அம்பலவாணர் சன்னதி !!
" இனி உயிர்கள் வழியே இல்லை நானே " என்று அழைத்து
வா என்னிடம் அமர்ந்து கண்ணை மூடு என்று இருத்திய இடத்தில் பதஞ்சலி முனிவர் படம் ஓர் சக்கரம் போன்ற அமைப்பு ஓர் அகல்விளக்கு ..
புறத்தே ஒளியூட்டினேன் !! அகத்தே ஒளியூட்டுகிறேன் !! என்று இருத்தி ..
நடராஜர் திருமேனி பின்புறம் அமர ஆசனம் அமைத்து அமர செய்து !!
அணுவணுவாக ஆட்கொண்டு ஆத்மானுபவம் அருளிய மாபெரும் கருணை ..
எத்தனையோ முறை சென்றாலும் !! உறவோடு சென்றாலும் !! தனியாக இஷ்டம் போல் ஈர்த்து !!
முன்னோர்கள் ஆசியில் தொடங்கி ..
22 தீர்த்தம் வழியே குளிர்வித்து உணர்வாடி ..
தரிசிக்க தன்னை தந்து ..
அகமாய் அனுபவிக்கவும் வைத்து நிறைந்து ..
சொல்ல வார்த்தைகள் கடந்த அனுபவத்தை அருளி அக்கொண்ட கருணை ..
திருச்சிற்றம்பலம் .
No comments:
Post a Comment