குருக்கள் அல்லது பட்டர் என்று அழைக்கப்படுவார் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு அபிஷேக வழிபாடு செய்யத் தகுதியுடையவர் என்றும் பிற எவரும் அப்பணியைச் செய்யக் கூடாது என்றும் சிவாலய சட்ட நூல்களாகிய சிவாகமங்கள் விதிக்கின்றன.
இவர்களை தவிர வேறு பிராமணர்கள் கூடக் கருவறையுள் நுழைய முடியாது.அவ்வளவு ஏன், சங்கராச்சாரிய சுவாமிகள் கூட சிவாலயக் கருவறையில் செல்ல, மூலவரைத் தொட்டு பூஜிக்க உரிமை கிடையாது என்பதை அறிவோமா..?
உதாரணம்; 24-07-2020 காஞ்சி சங்கராச்சியார் அவர்கள் தேனம்பாக்கத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில்,விஷ்ணு துர்க்கை சந்நிதியில் தீபாரதனையை நம் எல்லோரையும் போல வெளியில் இருந்து வணங்கி,தீபாரதனை தட்டை தொட்டு வணங்கினார்.
அதே போல்,எண்ணற்ற சிவாலயங்களைத் தமது ஆளுகைக்குள் கொண்ட சைவ ஆதீனங்களாகியத் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகியவற்றின் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்கள் கூட ஆதீனத் திருக்கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. செல்லவும் மாட்டார்கள்.
ஆதீனங்கள் பல இருந்திருந்தாலும் இன்று விளக்கத்தில் உள்ளவைகள் - நல்ல சொத்துகளோடு வசதியாக இருப்பது மொத்தம் 18 அவை:-
1. தருமபுர ஆதீனம்,
2. திருவாவடுதுறை ஆதீனம்,
3.மதுரை ஆதீனம்,
4. வேளாக்குறிச்சி ஆதீனம்,
5. நாச்சியார் கோயில் ஆதீனம்,
6. ராமேஸ்வரம் ஆதீனம்,
7.திருப்பனந்தாள் ஆதினம்,
8.குன்றக்குடி ஆதீனம்,
9. தொண்டைமண்டல ஆதினம்,
10 சிம்போள ஆதீனம்,
11.துலாவூர் ஆதீனம்,
12. நீலப்பாடி ஆதீனம்,
13. செங்கோல ஆதீனம்
14. சூரியனார் கோயில் ஆதீனம்,
15.தாயுமானவர் ஆதீனம்,
16. தரணி ஆதினம்,
17. சுர்க்கபுர ஆதீனம்
18. ஆகம சிவபிரகாச அதீனம்
அத்துனை ஆதினங்களும் குருவாக இருப்பவர்கள் சைவ வேளாளர்கள் மாத்திரமே. இதில் மதுரை ஆதீனம் மட்டும் சைவ முதளியார்கள் கட்டுப்பாட்டில்.
அதாவது அத்தனை அதீனங்களையும் நிர்வகிப்பது வேளாளர்கள் மாத்திரமே என்று சொன்னதை நீங்கள் முழுமையாக கவனிக்க வேண்டும். வேளாளர்களில் பல(24) பிரிவுகள் இருந்தும் ஆன்மீக பிரிவாக இருப்பது ""சைவ வேளாளர்!! மாத்திரமே.
சைவ வேளாளர்க்கு மட்டும் என்ன அந்த உரிமை மற்ற வேளாளர்களாகிய நாங்கள் என்ன மட்டமா?என்று மற்ற எந்த வேளாளர்களும் கேள்வி எழுப்புவது இல்லை.
அதேப்போல் குருக்கள், பட்டர்களுக்கு மட்டும் என்ன அந்த உரிமை,அப்படி என்றால் நாங்கள் என்ன மட்டமா?என்று எந்த பிராமணர்களும் கேள்வி எழுப்புவது இல்லை....
No comments:
Post a Comment