கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்த் தானா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டு உள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி விட்டார். நீரிழிவு பிரச்னையால், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விஜயகாந்த் வருவதாக தகவல் வெளியானது. அவரை காண தொண்டர்கள் திரண்டனர். விஜயகாந்தின் பிரசார வாகனம் அங்கு வந்ததும், தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
பின், தேசிய கொடியேற்றுவதற்காக கயிறை பிரேமலதா இழுத்தார். அவரால் இழுக்க முடியாததால், மாநில துணை செயலர் பார்த்தசாரதி கொடியை இழுத்து கொடுத்தார். விஜயகாந்தின் முக கவசத்தை எடுத்து விட்டு, அவருக்கு பிரேமலதா, இனிப்பு ஊட்ட முயன்றார்.
தேசிய கொடி ஏற்றுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், பிரசார வாகனத்தில் இருந்தபடி, பிரேமலதா தேசிய கொடி ஏற்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment