Monday, October 3, 2022

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பெண் தாசில்தார் கைது.

 திருச்சியில் அனுமதியின்றி மரக்கிளையை வெட்டியதாக கூறி விவசாயியிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே, மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன்.இவரது விவசாயத் தோட்டத்தின் வழியே சென்ற மின கம்பிகளில், உரசிய மரக்கிளைகளை, விபத்தை தவிர்க்கும் விதமாக வெட்டியுள்ளார்.

தகவல் அறிந்து கடந்த மாதம் 25ம் தேதி, விவசாய நிலத்துக்கு சென்று, சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்திய மருங்காபுரி தாசில்தார் லட்சுமி, 54, வருவாய்த்துறை அனுமதி இன்றி மர கிளைகளை வெட்டியதால் போலீசில் புகார் செய்யப்படும், என்று தெரிவித்துள்ளார்.

புகார் செய்யாமல்  இருப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் தரவேண்டும், என்று கேட்டுள்ளார்.

கடந்த 1ம் தேதி, தாலுகா அலுவலகத்துக்கு சென்ற சுப்பிரமணியனிடம், 10 ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும், என்று தாசில்தார் லட்சுமி தெரிவித்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சுப்பிரமணியன், திருச்சி லஞ்ச போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரைப்படி, நேற்று, சுப்பிரமணியன் 10 ஆயிரம் ரூபாய், தாசில்தார் லட்சுமியிடம் கொடுத்துள்ளார்.அப்போது, தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் லட்சுமியை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...