Monday, October 10, 2022

ரொம்ப நாள் பயன்படுத்திய வெள்ளை துணி பழுப்பு நிறம் ஆகிவிட்டதா? கை வலிக்காமல் பழைய வெள்ளை சட்டை, பழைய வேட்டி, பழைய டர்க்கி டவல் இவைகளை புதுசு போல மாற்ற இதோ இந்த 2 பொருள் போதுமே.

 நம்முடைய வீட்டில் நீண்ட நாட்களாக ஒரு வெள்ளை துணியை பயன்படுத்தி வந்தோமானால், அந்த வெள்ளை துணி சில நாட்களிலேயே பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். அதோடு மட்டுமல்லாமல் சில வீடுகளில் வெள்ளை நிற டர்க்கி டவலை கூட பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட எல்லா வெள்ளை துணிகளையும் புதுசு போல மாற்ற ஒரு குறிப்பு. இதோடு சேர்த்து பீரோவில் இருக்கும் துணிகளை எல்லாம் நாப்தலின் பால் என்று சொல்லப்படும் பூச்சி உருண்டை போடாமலேயே வாசமாக வைத்திருக்க ஒரு சின்ன குறிப்பும் உங்களுக்காக. முதலில் அழுக்கு படிந்த வெள்ளை துணிகளை எப்படி சுத்தம் செய்வது என்று பார்த்து விடுவோம்‌. ஒரு பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/4 பாக்கெட் அளவு கொதிக்க இருக்கக்கூடிய சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது சோப்பு பவுடர் 1 ஸ்பூன் போட்டுக்கோங்க. காஸ்டிக் சோடா 1 டேபிள் ஸ்பூன் போட்டு, கை படாமல் ஒரு குச்சியை வைத்து இந்த கலவையை நன்றாக கலந்து விடுங்கள். கேஸ்டிக் சோடாவை சுடுதண்ணீரில் போட்டதும் பொங்கி வரும். கையை கட்டாயமாக இந்த தண்ணீரில் நீங்கள் வைக்கவே கூடாது. - Advertisement - பொங்கி நுரை வந்து அடங்கியதும் ஒரு குச்சியை விட்டு இதை கலந்து விட்ட பின்பு வெள்ளை துணிகளை எடுத்து இந்த தண்ணீரில் போட்டு குச்சியை வைத்தே நனைத்து, அப்படியே 1 1/2 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் விட்டு விடுங்கள். (மேலே சொன்ன அளவுக்கு இரண்டு அல்லது மூன்று வெள்ளை துணிகளை துவைக்கலாம்.) அதன் பின்பு அந்த துணிகளை நல்ல தண்ணீரில் 3 முறை அலசி எடுத்து விட்டாலே போதும். வெள்ளை துணிகளில் இருக்கும் அழுக்கு முழுவதும் நீங்கிவிடும். பழுப்பு நிறம் வெள்ளையாக மாறும். caustic soda வில் கை பட்டால் உங்களுடைய கை வெந்து போய்விடும். ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இந்த டிப்ஸை ட்ரை பண்ணனும். பயமாக இருக்கிறது என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்யாதீங்க. - Advertisement - இரண்டாவதாக துணிகளை எப்படி வாசமாக வைப்பது என்று பார்ப்போம். இந்த குறிப்பை எல்லோரும் பின்பற்றலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூள் 1 ஸ்பூன், ஆப்ப சோடா 1/3 ஸ்பூன், கம்போர்ட் 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது சப்பாத்தி மாவு போல பிசைந்து நமக்கு ஒரு உருண்டையாக கிடைத்துவிடும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து வீட்டுக்குள்ளேயே நிழலில் ஒரு நாள் காய வைத்தால் நன்றாக கட்டியாக உருண்டை போல நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு காட்டன் மெல்லிசான துணியில் கட்டி அப்படியே பீரோவில் மாட்டி வைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு கூட வைக்கலாம். வாசம் வெளியேறும்படி வையுங்கள். அப்படியும் இல்லை என்றால் யூஸ் அண்ட் த்ரோ மாஸ்க் இருக்கிறதல்லவா, அதை வெட்டினால் இரண்டு லேயர் கிடைக்கும். அதன் உள்ளே இந்த பால்களை போட்டு ஒரு ரப்பர் பேண்ட் போட்டு அப்படியே பீரோவில் எங்கேயாவது மாட்டி வைத்து விடுங்கள்.  உங்கள் பீரோ முழுவதும் கெட்ட வாடை வீசவே வீசாது. குறிப்பாக மழைக்காலத்தில் நம்முடைய வீட்டில் மூடி இருக்கும் கபோர்டு எல்லாமே பூசனம் பிடித்த வாடை வீசும். அப்படி அந்த வாடையில் இருந்து தப்பிக்க இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். இதே போல செருப்பு ஷூ வைத்திருக்கும் அலமாரிகளில் கூட நாம் தயார் செய்த இந்த உருண்டைகளை போட்டு வைக்கலாம். உங்களுக்கு மேல் சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா யூஸ்ஃபுல்லா இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...