Friday, October 7, 2022

ஆசிரியர்களை மதியுங்க பெற்றோரே!

  மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறி, அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியாக, தெய்வத்திற்கும் முன்னால் குருவை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தனர் நம் முன்னோர். அதற்கு காரணம், சுய நலம் கருதாத ஆசிரியர்களால் தான், நல்ல மாணவர்களையும், உயர்வான சமுதாயத்தையும் உருவாக்க முடியும் என்பதே.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் செயல்படும், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள், சிகரெட் பிடித்து புகையை மாணவியர் முகத்தில் ஊதி அட்டகாசம் செய்து உள்ளனர்.இதுபற்றி, பாதிக்கப்பட்ட மாணவியரும், அவர்களது பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்க, தவறிழைத்த மாணவர்களை, ஆசிரியர்கள் நான்கு பேர் கண்டித்துள்ளனர். ஆனால், தவறிழைத்த மாணவரின் பெற்றோரோ, தங்களது மகன்களுக்கு உள்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்க, ஆசிரியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளதுடன், மற்ற இரு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கேட்கும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படி தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் உரிமையானது, ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுமானால், சமுதாயம் மேலும் சீர்கேட்டுக்கே ஆளாகும்.முன்பெல்லாம், ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளில் கூட மாணவர்களை பெயிலாக்கி விடுவர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காகவே, ஆசிரியர்கள் அவ்வாறு செய்வதாக எண்ணி ஒத்துழைப்பு தருவர். அதன் வாயிலாக, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், சிறு வயதிலேயே மாணவர்களுக்கு உருவானது. ஆசிரியர்களும் பொறுப்பறிந்து நடந்து கொண்டனர். ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் எனில், பெற்றோரும் அவர்களை மதிக்க வேண்டும். அப்பொழுது தான், ஆசிரியர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். கல்வி கற்பதே ஒழுக்கமுடன் வாழத்தான் என்பதை, ஒவ்வொரு மாணவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டும்!lll-

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...