கட்சித் தலைவருக்காக நடக்கவிருக்கும் தேர்தலில் கூட, இந்தக் கலையை அவர்கள் மிகத் துல்லியமாகச் செய்தார்கள். அதாவது கட்சித் தலைமை செய்தது.
சோனியா காந்தியின் சூழ்ச்சி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
சோனியா காந்தி மல்லிகார்ஜுன் கார்கேவை அழைத்து இரவோடு இரவாக
அவரைக் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் பணித்தார்.
அதிகாலையில் இந்தச் செய்தியைக் கேட்ட திக்விஜய் சிங்குக்குப் பெரும் அதிர்ச்சி. ஆனால் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ள முடியவில்லை.
ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிந்தது. தன்னை இப்படி அவமதித்து விட்டார்களே என்ற வருத்தம் தெரிந்தது. ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், "கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டிக் கொள்ளவில்லையே" என்பது போல், நான் போட்டியிட விரும்பவில்லை, மல்லிகார்ஜுன் கார்கேவை ஆதரிக்கிறேன் என்று பேட்டி அளித்தார்.
காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்தது திக் விஜய் சிங் மட்டுமே அல்ல. சசி தரூரும் ஏமாந்தார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்த பிறகு சசிதரூர் சோனியா காந்தியைச் சந்தித்தார். காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடந்து கொள்ளும் என்று சோனியா காந்தி தனக்கு உறுதி அளித்ததாக மீண்டும் மீண்டும் சொல்கிறார் சசிதரூர்.
ஆனால் சோனியா காந்தியின் சதி பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. இரவோடு இரவாக மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடத் தயாரானது சசி தரூருக்குச் சரியான அதிர்ச்சி தான்.
மல்லிகார்ஜுன் கார்கே ஒரு Official Candidate என்று கூறப்படுவது சசிதரூருக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி. கார்கே Official Candidate என்றால் மற்ற போட்டியாளர்கள் எல்லாம் என்ன, unofficial candidate -களா?
ஒரு கடை மட்டத் தொண்டன் கட்சித் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தால் கூட அவனும் ஒரு Official Candidateதானே? அப்படி இருக்க மல்லிகார்ஜுன் கார்கேவை மட்டும் Official Candidate என்று அழைப்பது எப்படி நியாயம்?
Official Candidate என்று அழைக்கப்படுவதால், தேர்தல் களம் கார்கேக்குச் சாதகமாக அமையும். அதிக வாக்குகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்பு அதிகமாகும். சசிதரூர் மண்ணைக் கவ்வுவார்.
இதுதான் காங்கிரஸ் தலைமையின் சூழ்ச்சி. விஜய் சிங்கும் சசிதரூரும் தலைமையை நம்பி ஏமாந்து போனார்கள்.
காங்கிரஸ் தலைமைக்கு
சசிதரூரைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் சுதந்திரமான சிந்தனை உடையவர். யாருக்கும் எளிதாகத் தலை வணங்கும் பழக்கம் இல்லாதவர்.
காங்கிரஸ் தலைமைக்கு திக்விஜய் சிங்கையும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹலோட்டுக்கு ஆன கதி நமக்குத் தெரியும்.
கட்சியின் மூத்த தலைவர்களுக்கே இவ்வளவுதான் மரியாதை என்றால், கடைசித் தொண்டனுக்கு என்ன மரியாதை இருக்கும்?
இதுதான் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சி!
No comments:
Post a Comment