'திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதுடன், ராஜராஜ சோழனை ஹிந்து மன்னனாகவும் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், சினிமா இயக்குனர் வெற்றி மாறன்.
ராஜராஜ சோழன், ஹிந்து மன்னன் இல்லை என்றால், தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோவிலை எப்படி கட்டி இருக்க முடியும்? தன் மகனுக்கு ராஜேந்திரன் என்று எப்படி பெயர் வைத்திருக்க முடியும்?
ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை படையெடுத்து சென்று, வெற்றி மேல் வெற்றி பெற்று, 'கங்கை கொண்டான்' என்ற பட்டம் பெற்றது எப்படி?
தஞ்சாவூர் கோவில் போன்றே, கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவன் கோவிலை கட்டி வைத்த ராஜேந்திர சோழனும், ஹிந்து மன்னன் இல்லை என்று, இந்த அறிவுஜீவி சொல்வாரா?
திருவள்ளுவரையே கிறிஸ்தவர் என்று சொன்ன அறிவுஜீவிகளும் இருக்கின்றனர். ராஜராஜன் ஹிந்து இல்லை என்றால், அவன், 'சர்ச்'சுகளையோ, மசூதிகளையோ தானே கட்டியிருக்க முடியும்? ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும் இழிவுபடுத்திய கூட்டம், இப்போது ஹிந்து மன்னனான ராஜராஜ சோழனையும், கிறிஸ்தவனாக, முஸ்லிமாக காட்ட முயற்சிக்கிறது.
போகிற போக்கை பார்த்தால், இந்த அறிவுஜீவிகள் கல்லணையை கட்டியவன் கரிகாலன் இல்லை... ஒரு வெள்ளைக்காரன் தான் கட்டினான் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. இந்த சினிமா இயக்குனர்கள் நினைத்தால், ராமாயண காவிய ராமனை அயோக்கியனாகவும், ராவணனை உத்தமனாகவும் காட்டி விடுவர்.
மறைந்த வில்லன் நடிகர் ஆர்.எஸ்.மனோகர், தன் நாடகங்களில், ராவணனாக, இரண்யனாக வேடம் போட்டு, அவர்களின் பராக்கிரமங்களை எடுத்து சொல்லி, பெருமை சேர்த்ததை நாம் மறக்க முடியுமா... கலியுகத்தில், நல்லவர்களை எல்லாம் நயவஞ்சகர்களாக காட்ட ஒரு கூட்டம் புறப்பட்டுஉள்ளது.
வரலாற்றை திரிக்க முற்படும் இது போன்ற ஜென்மங்களை, ஹிந்துக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து, நாட்டை விட்டே துரத்த வேண்டும்.lll
No comments:
Post a Comment