Monday, October 10, 2022

ஆ.ராஜாவின் கேவலமான கற்பனை!

  உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும், மிகவும் பழமையானது ஹிந்து மதம். ஹிந்து மதத்திற்கு முன்னதாக, வேறு மதம் இருந்தது என்பதற்கான வரலாற்று சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா கூறிய, பஞ்சமன் என்ற சொல், எந்த வேதத்திலும் இடம் பெறாதது.


பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வருணம் பகுப்பு பற்றியே, வேதத்தின் ஒரு பகுதியான, 'புருஷ சூக்தம்' என்ற பாடலில் குறிப்பு உள்ளது.

அந்த நான்கு வருணத்திற்கும், நான்கு வித கடமைகளை சொல்லி, அவற்றை ஒவ்வொரு வருணத்தாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி வருணத்தார், ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு பாராட்டும்படி, எந்த சமய நுாலிலும் குறிப்பிடப்படவில்லை.

பிராமணர்கள் எல்லா இன மக்களின் ஆன்மிக பண்பாட்டிற்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் பாதுகாவலன் என்ற கடமையும், பொறுப்பும் ஷத்திரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பது மட்டுமின்றி, சமுதாயத்தை பராமரிக்கும் கடமையும், பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.

வைசியர், பொருளியலில் வல்லவர்களாக திகழ்ந்தனர். சமுதாயத்திற்காக பண்டங்களை உற்பத்தி செய்து அல்லது சேகரித்து வினியோகிப்பது, அவர்களது பொறுப்பாகும்.

அடுத்ததாக, சூத்திரர்கள் என குறிப்பிடப்படுபவர்கள், சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமல்ல... உடல் வலிமை அடிப்படையில், உழைக்கும் பண்பாளர்களாக திகழ்ந்தனர். தங்கள் உழைப்பின் வாயிலாக, சமுதாயத்திற்கு சேவை செய்வது, இவர்களின் கடமையாக கருதப்பட்டது.

எந்த ஒரு பிரிவினரையும், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி, இழிவுபடுத்தக்கூடிய ஆதாரம் எதுவும், ஹிந்து சமய நுால்களில் அறவே இல்லை.

அந்த மனோபாவம், ஆ.ராஜாவைப் போன்ற சில விஷமிகளின் கேவலமான கற்பனையே அன்றி வேறில்லை. அந்த கற்பனைக்கு செவி சாய்ப்பதை விடுத்து, அதை புறந்தள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...