சென்னையில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலுக்கு போயிருந்தேன்.இரண்டு இட்லி ஒரு வடை கேட்டேன். ‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ சார் என்று கேட்டார் சர்வர் . எனக்கு புரியவில்லை.
‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன்.
புதுசாக இருக்கே என வாங்கி சாப்பிட்டேன். இன்று இந்த ஹோட்டலில் மட்டுமல்ல... காம்போ இல்லாத ஹோட்டல்களே இல்லை என்றே கூறலாம்.
இப்போ இதை எதுக்கு சொல்றேன்னா
எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி. சென்னையில் அண்ணா நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள். ‘
உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்கு சட்டென்று அடையார் ஆனந்தபவன் நினைவுக்கு வந்து போனது. ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள். எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு லங்ஸ்க்கு என தனித்தனி காம்போ இருக்கிறது. அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
ஒரு கல்யாணம் காட்சி என்றால், மண்டபம், புரோகிதர், சாப்பாடு,அலங்காரம், வாழைமரம், சிட்டிங் அரேஞ்மெண்ட், வரவேற்பு வரை காம்போதான். சாப்பிடும் போது தண்ணீர் பாட்டில் மூடியை திறந்து கொடுப்பதுவும் காம்போவில் அடங்கும்.
இதுகூட பரவாயில்லை, ஒரு மனிதர் இறந்து போய் விட்டால், அதற்கும் காம்போதான். தேங்காய் உடைத்து தலைமாட்டில் வைப்பதிலிருந்து மாலை, ஐஸ்பாக்ஸ், சவஊர்வள ஏற்பாடு, வெட்டியான் செலவு, ஷாமியானா, நாற்காலிகள், காபி உபசரனை எல்லாமே காம்போ தான். இறந்தவற்காக அழமட்டும் நாம்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை.காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும். வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும். இதுதான் வாழ்க்கை. இவ்வளவுதான் வாழ்க்கை. அதற்குள்தான் எவ்வளவு போட்டிகளும் பொறமைகளும்!**
*மனசுக்குள்ள இருக்கும்*‘ *அழுக்கு, போட்டி, பொறமை, குரோதம்’ என்ற காம்போவை தூக்கி தூர வெச்சுட்டு*,
இருக்கிற வரைக்கும் ‘*அன்புகாட்டுவது, உதவி செய்வது, நல்லதை நினைப்பது..’ என்ற காம்போவை மட்டும் செலெக்ட் பண்ணி பாருங்க*...
*சந்தோஷம் என்பது நீங்களே விரட்டினாலும் உங்களை விட்டுப் போகாது.*
காம்போ மஹாதேவா ....... சாரி....சாரி
*சம்போ மஹாதேவா*
No comments:
Post a Comment