Friday, October 7, 2022

பொன்னியின் செல்வனும் குமரவேலும்.

 இளங்கோ குமரவேல்- பொன்னியின் செல்வன் நாடகங்களை மக்களிடையே பல்வேறு மேடைகளில் நாடக வடிவமாக எடுத்துச் சென்றுள்ளவர். மணிரத்னத்தின் பொ.செல்வன் திரைப்படத்தில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அடிப்படையில் மேடை நடிகராக அறியப்படுபவர்தான் இளங்கோ குமரவேல். திரைப்பட நடிகராக பல படங்களில் தோன்றியவர். நாடகாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
அழுத்தமான கதாபாத்திரங்களை மிக எளிதாக நடித்துவிடும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இளங்கோ குமரவேல். அபியும் நானும், மொழி, குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களில் கவனம் ஈர்த்தவர். சுழல் வெப்சீரிஸ் மற்றும் பெருவெற்றி பெற்ற விக்ரம் படத்தில் மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார்.
1998-ல் முதல் பொன்னியின் செல்வன் நாடகத்தை பல்வேறு இடங்களில் அரங்கேற்றியவர்தான் குமரவேல். பின் 2014 இல் மீண்டும் நாடகம் போட்டு பல்வேறு இடங்களில் ஹிட் அடித்தது. பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுத்த நாடகத்தைப் பார்த்து 2018-ல் மணிரத்னம் இவரை திரைப்படத்தில் பணிபுரிய கூப்பிட்டார். சிக்கலான கதை, கிளைக்கதைகள் நிறைய பாத்திரங்களை கொண்ட கதையை திரைப்படமாக்குவது அவ்வளவு எளிதல்ல.
தற்போது திரையரங்கில் நமக்கு படத்தின் கதை எளிதாக புரிவதற்கு இவரின் திரைக்கதை பங்களிப்பும் பெரிதாக உதவி புரிந்துள்ளது.
May be an image of 1 person and beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...