Friday, October 7, 2022

செக்ஸ் என்பது என்ன?

 அது ஒரு சம்பிரதாயமாக (Ritual) ஆக மாற்றப்பட்டுவிட்ட நாட்களில் வாழ்கிறோம். எப்பொழுது அது சம்பிரதாயமானது? திருமணம் என்ற சம்பிரதாயத்தில் இரு உடல்கள் சங்கிலியால் பிணைக்க்கப்ட்ட காலத்திலிருந்து!

செக்ஸ் என்பது ஒரு பெண்ணின் துவாரத்தில் ஒரு ஆண் தன் உறுப்பை நுழைப்பதோ, செக்ஸ் இன்பம் என்பது நுழைத்ததை எவ்ளோ நேரம் உள்ளே வைத்திருக்கிறோம் என்பதோ இல்லை!
நேரம் குறித்து, இடம் பார்த்து செய்யப்படுவதும் இல்லை! ஒருவருக்கு அந்த உணர்வு தன்னிச்சையாக ஏற்படாதபோதும், மற்றவருக்காக உடன் படுவதும் இல்லை!
உடல் எத்தனை சுகம் காண்கிறது, எத்தனை நேரம் காண்கிறது என்பதும் இல்லை!
இதையெல்லாம் செக்ஸ் என்று நாம் செய்து கொண்டிருப்பதால் தான் அதில் மனம் திருப்தியடைவதில்லை! மேலும் மேலும், மூளையும், உடலும் தேடிக்கொண்டேயிருக்கிறது இன்னும் கொஞ்சம் இன்பம் கிடைக்காதாவென!
அப்பொழுது எதுதான் செக்ஸ்?
செக்ஸ் ஒரு உணர்வுபூரணமான உந்துதல். ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் இருவருக்குள்ளும் நெருக்கத்திற்கு ஏங்கும் ஒரு உந்துதல். அதை ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் உணர்த்த வேண்டிய அவசியமில்லை. பலர் கூடியிருக்கும் சபையிலும் இருவர் உணர்வுகள் ஒன்று கூடும் போது அந்த நெருக்கம் அவர்களுக்குள் உணரப்படும். காதல் மொழி பேசத்தேவையில்லை! உடல்கள் பிண்ணிப்பினைந்தால் தான் செக்ஸ் என்பதில்லை! உன் உணர்வுகள் என்னையும் தீண்டியிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும், ஒரு மென் அணைப்பு, ஒரு நொடியில் பகிரப்படும் ஒரு முத்தம், அப்படி உணரப்படும் நேரங்களில் இடமோ, நேரமோ ஒத்துழைத்தால் இதமான அணைப்புடனான ஒரு குட்டி உறக்கம் இதெல்லாம் செக்‌ஸ்தான். இதையும் தாண்டி அந்த மெல்லிய உணர்வுகள் மனதைத் தாண்டி உடலைத் தீண்டி உத்வேகம் அளிக்க முற்படுகையில் (அதுவும் இருவருக்குமான உத்வேகம்) எந்த எல்லையும், வரைமுறையும் இல்லாமல், எந்தத் தயக்கமோ, வேறு எண்ணங்களோ மனதை தாக்காமல், சிறுபிள்ளைகள் விளையாடும் போதோ, சண்டை போடும்போதோ சுற்றுப்பறத்தைப்பற்றியான எந்த சிந்தனையுமில்லாமல், அதில் தன்னைத் தொலைத்து லயிப்பது போல், ஒவ்வொரு அசைவும் தன்னிச்சையாக, முடிவைப்பற்றியதான இலக்குகள் இல்லாமல் ஒருமனதாக பிரயாணிப்பதே செக்ஸ் ஆகும்.
இங்கு ஆரம்பம் ஒருங்கிணைந்த நெருக்கத்திற்கான உந்துதல். முடிவை நோக்கிய எண்ணங்களோ, இது இப்படி செய்ய வேண்டும், அப்படி முடிய வேண்டும் என்ற முனைவுகளோ எதுவுமில்லை! ஒருங்கினைந்த அந்த உந்துதல் உணரப்படும் நேரமும் முழுமையே, ஒரு மென் அணைப்பும் முழுமையே, ஒரு அழுத்தமான கைபிடித்தலும் முழுமையே, ஒரு நெற்றி முத்தமும் முழுமையே......அந்த உள்ளார்ந்த உணர்வுகளின் உந்துதலில் நடக்கும் கலவியாக எனக்குள் உன்னை உணர்கிறேன், உன்னுள் நான் கரைகிறேன் என்பதும் முழுமையே!
இங்கு ஐயோ எனக்கு உன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்த்து ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாத்தால் செய்ய முடியவில்லை. உன் நினைவாகவே இருக்கிறேன், சரியான சந்தர்ப்பம் அமைத்து சந்திப்போம் செக்ஸ் வைத்துக்கொள்ள என்பது அந்த நேரத்து இயற்க்கை உணர்வை கொச்சைப்படுத்தி, அதை ஒரு பெர்ஃபார்மென்ஸாக, சம்பிரதாயமாக ஆக்கிவிடும் முயற்சியே!
வெறும் விந்து வெளியேற்றத்தின் உடல் உந்துதலுக்கோ, உடல் சுகத்தின் உச்சத்திற்கோ செக்ஸ் என்று பெயரிட்டால், அதற்கு அவரவர் கையே போதுமானது. அதைத்தாண்டி இன்னொருவரை இதற்கு நாடுகிறோம் என்றால், அது மற்றவரின் உதவி வேண்டியே தவிர, உணர்வு வேண்டியல்ல!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...