இன்று பலர் இதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் ராசிப்படி மட்டும் கல் அணிகின்றனர். கல் அணியும்போது மிகவும் கவனம் தேவை.லக்னப்படி கல் அணிவதே சிறப்பு. மேலும் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.6,8,12 சம்பந்தம் பலமாக உள்ள கிரகத்தின் கல்லை அணிந்தால் பலன் எதிர்விதமாக இருக்கும்.லக்ன யோகம் பெற்ற கிரகங்கள் வலுவுடன் இருந்தால் பலன் மிகச்சிறப்பாக இருக்கும்.உதாரணமாக மேஷ லக்கினத்திற்கு குரு லக்கினத்தில் இருந்து செவ்வாயும் குரு நின்ற சாரநாதனும் வலுப்பெறின் புஷ்பராகக் கல்லை அணிவது மிகச்சிறப்பு. மேலும் அணியும் கல் ஒரிஜினலாக இருக்க வேண்டும். 300,500,2000,3000 போன்ற விலைகளில் கிடைப்பதில் பயனில்லை. ஸ்ரீலங்கா மற்றும் நேபாளத்தில் இருந்துவரும் ஒரிஜினல் கல் நல்ல பலனைத் தரும்.
கல் சரியாக அமையாவிட்டால் அனைத்தையும் இழக்கவும் நேரிடலாம்.
அதே போல் சரியாக அமைந்துவிட்டால் அனைத்தையும் பெறவும் செய்யலாம்.
அதைவிட்டு விட்டு சனி திசை நடந்து சனி ஆனவர் செவ்வாய் சாரத்தில் அமர செவ்வாயின் கல்லான பவிளத்தை அணிவதால் இழப்பே மிஞ்சும்.
நன்கு ஜாதகத்தை ஆராய்ந்து கல் அணியுங்கள்.
No comments:
Post a Comment