*🌹முடக்கு_வாதம்_வெறும்_எலும்பு* *தொடர்பான_நோய்_மட்டும்_அல்ல...* *கவனம்_தேவை_மக்களே.…🌹*
📌📌📌📌📌📌📌📌📌📌📌
👇👇👇👇👇👇👇👇👇👇👇
📌📌📌📌📌📌📌📌📌📌📌
👇👇👇👇👇👇👇👇👇👇👇
*முடக்கு வாதத்தில் 300-லிருந்து 500 வகைகள் உள்ளன……*
பல நோய்களின் கூட்டுதான் முடக்கு வாதம். ஆனால், முடக்கு வாதம் என்றாலே பலரும், அது எலும்பு தொடர்பான நோய், மூட்டுவலி என்று நினைத்துவிடுகிறார்கள். இது மூட்டு, தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்ககூடியது.
அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள்.
அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள்.
இது ஒரு #autoimmune_disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல்……
தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது.
உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும்.
👉 உதாரணமாக……
கண் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும்.
கைகளில் முடக்கு வாதம் வந்தால் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் அதிக வலியை ஏற்படுத்தும்.
கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளைச் சுழற்றவோ முடியாது.
பாதம் மற்றும் கணுக்காலில் ஏற்பட்டால், அதிக வலியோடு, நடக்கக்கூட முடியாமல் போய்விடும். சில முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு……
நுரையீரல் மற்றும் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இதயம், நுரையீரல் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
இப்படி முடக்கு வாதத்தில் 300-லிருந்து 500 வகைகள் உள்ளன.
நீண்ட நாள்களுக்கு முடக்கு வாதம் இருந்து கவனிக்காமல் விட்டுவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்றவற்றையும் பாதித்துவிடும்.
🔴 ருமட்டாய்டு ஆர்த்தரட்டிஸ்
(Rheumatoid Arthritis)
(Rheumatoid Arthritis)
சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாதநிலையில் மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும். அப்படி நீண்ட நாள்கள் வலி இருந்தால், அதற்கு `ரூமட்டாய்டு முடக்கு வாதம்’ என்று பெயர். அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களைப் பாதித்து, அதன் செயல்பாடுகளைக் குறைத்துவிடும்.
இந்தப் பிரச்னை பொதுவாக, எல்லோருக்கும் வரலாம் பெரும்பாலும், நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கை, கால் மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இதை குணப்படுத்த 100% முடிவும். என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் சிறப்பு.
👉 இல்லையென்றால், முடக்கு வாதம்……
இதயத்தைச் சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியிருக்கும் ப்ளியூரா (Pleura), கண்ணின் வெள்ளைப் பகுதியான ஸ்கிளிரா (Sclera) போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
🔴 லூபஸ் முடக்கு வாதம் (Lupus)
இதற்கு `செம்முருடு’ என்ற பெயரும் உண்டு. இதுவும் பெண்களை அதிகம் தாக்கக்கூடிய பிரச்னை.……
உடல் சோர்வு,
மூட்டுவலி,
சொறி,
நீண்ட நாள் காய்ச்சல்
போன்றவை இந்தப் பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகள்.
தசைகளில் வலி,
மூச்சு விடும்போது மார்பில் வலி,
தலை முடி உதிர்வு,
தோல் நோய்,
வெயில் ஒவ்வாமை,
சிறுநீரகத்தில் ரத்தம் போதல்,
உடல் எடை குறைதல்,
முகத்தில் வண்ணத்துப்பூச்சி
போன்ற வடிவில் சொறி உண்டாவது
போன்ற வடிவில் சொறி உண்டாவது
போன்ற அறிகுறிகள் தென்படும். இந்தப் பிரச்னையைக் கண்டு
கொள்ளாமல்விட்டால்……
கொள்ளாமல்விட்டால்……
தோல்,
சிறுநீரகம்,
ரத்தச் செல்கள்,
மூளை,
இதயம்,
நுரையீரல்
போன்றவை பாதிக்கப்படலாம்.
🔴 முதுகெலும்பு முடக்கு வாதம்
'#ஸ்பாண்டைலோ_ஆர்த்ரிட்டிஸ்'
(Spondyloarthritis)
எனும் ஒருவித முடக்கு வாதம்.
முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் ஒன்றோடு இணைந்து இறுகிப் போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது. முதலில் முதுகுவலியில் தொடங்கும். கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும். அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். கூனல் விழும். இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும். முற்றியநிலையில் கண்களையும் பாதிக்கலாம்.
(Spondyloarthritis)
எனும் ஒருவித முடக்கு வாதம்.
முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் ஒன்றோடு இணைந்து இறுகிப் போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது. முதலில் முதுகுவலியில் தொடங்கும். கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும். அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். கூனல் விழும். இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும். முற்றியநிலையில் கண்களையும் பாதிக்கலாம்.
🔴 ஸ்க்லீரோடெர்ம (Scleroderma)
இந்த நோய் பாதிப்பால், தோல் இறுகிப் போய்விடும்.
சிலருக்கு நுரையீரல், குடல், இதயம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கும்.
சிகிச்சைக்குப் பிறகு சில வருடங்களில் தோல் இறுக்கத்தைச் சரி செய்து விடலாம்.
ஆனால், இந்த முடக்கு வாதத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.
🔴 கீல்வாத நோய் (Gout)
`யூரிக் ஆசிட்’ என்னும் உப்பு உடலில் அதிகரிப்பதால் 'கெளட்' (Gout) எனப்படும் கீல் வாதநோய் உண்டாகிறது. ஆறு வாரங்களுக்கு மேல் எலும்புகள் இணையும் பகுதிகளில் வலி இருந்தால், அது கீல் வாதநோயாக இருக்கலாம்.
முடக்கு வாதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யவேண்டியவை...
முடக்கு வாதத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யவேண்டியவை...
* உடலில் கை, கால், தசை, மூட்டுகள் என எங்கேயாவது வலி, வீக்கம் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் அது முடக்கு வாதமாக இருக்கலாம்.
💢 நவீன மருத்துவத்தில் இது
Rheumatoid arthritis.
Rheumatoid arthritis.
❓பாதிப்புகள்……
பொதுவாகக் கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும்.
கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும்.
மணிப் பந்து மூட்டுகள்,
விரல்கள்,
கணுக்கால்,
முழங்கால்
போன்றவை பாதிக்கப்பட்டு நீர் சேர்ந்து காணப்படும்.
👉 மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும்.
மூட்டுகளில் வலி ஏற்படும்,
மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும்.
காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது.
இதை morning stiffness என்று சொல்வார்கள்.
மூட்டுகள் சூடாக இருக்கும்,
தொட்டால் வலிக்கும்.
உள்ளேயும் வலி காணப்படும்.
இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மேலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதை pleurisy, interstitial lung disease என்று சொல்வார்கள்.
கண்கள், வாய் வறண்டு போகலாம்.
உடலில் சிறு கழலைகள் தோன்றும்.
இதைக் கிரந்தி என்று சொல்வார்கள். வலி அவதிப்படுத்துவதால், இவர்களால் நன்கு தூங்க முடியாது.
❓#இரத்த_பரிசோதனைகள்
[முடக்கு வாதம்]
[முடக்கு வாதம்]
1, Creatinine
Urea
Uric Acid
Urea
Uric Acid
2, ELECTROLYTE
3, CBC
Esr
Esr
4, IgE
5, Ra Factor
6, Crb
7, Anti CCP antibody
⃣ மருந்து செய்யும் முறை
❓தேவையானவை
மூக்கிரட்டை ........... ஐம்பது இலைகள் ( ஐந்து மடங்கு )
குப்பைமேனி .............. பத்து இலைகள்
( ஒரு மடங்கு )
( ஒரு மடங்கு )
இரண்டையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வர குணம் கிடைக்கும்
நாள்தோறும் ஒருவேளை குடிக்கலாம்
சிறுநீரகம் பாதிக்கப்படாமல் காப்பாற்றும்
மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு எந்த மருந்து சாபிட்டலும் இந்த மருந்தையும் சேர்த்து சாப்பிட்டுக் குணமடையலாம்.
நாள்தோறும் ஒருவேளை குடிக்கலாம்
சிறுநீரகம் பாதிக்கப்படாமல் காப்பாற்றும்
மேலே குறிப்பிட்ட நோய்களுக்கு எந்த மருந்து சாபிட்டலும் இந்த மருந்தையும் சேர்த்து சாப்பிட்டுக் குணமடையலாம்.
⃣ மருந்து செய்யும் முறை
வில்வம் வேர் ................ ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )
பாதிரி வேர் ................ ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )
பெருவாகை வேர் ................ ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )
குமிழ் வேர் ................ ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )
தழுதாழை வேர் ................ ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம் )
ஆகிய ஐந்து மரங்களின் வேர்களை கொடுக்கப் பட்டிருக்கும் அளவுகளின்படி
ஒரு லிட்டர் தண்ணீரில் அனைத்துப் பொருட்களையும் போட்டு சிறுதீயில் காய்ச்சி முன்னூறு மில்லி கசாயமாக்கி இறக்கி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன் வேளைக்கு நூறு மில்லி குடித்து வர குணம் காணலாம்
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் கலந்தும் குடிக்கலாம்
ஒரு லிட்டர் தண்ணீரில் அனைத்துப் பொருட்களையும் போட்டு சிறுதீயில் காய்ச்சி முன்னூறு மில்லி கசாயமாக்கி இறக்கி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன் வேளைக்கு நூறு மில்லி குடித்து வர குணம் காணலாம்
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் கலந்தும் குடிக்கலாம்
மருந்தாக எண்ணாமல் டீ காப்பி குடிப்பது போல தினமும் குடித்து வர
உடலின் ஆரோக்கியமும் மூட்டுகளின் ஆரோக்கியமும் மேம்பட்டு குறிப்பாக வலிகளில் இருந்து
விடுபட முடியும் வேறு எந்த மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் இந்த கசாயத்தையும் சேர்த்துக் குடித்து நோயின் பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
உடலின் ஆரோக்கியமும் மூட்டுகளின் ஆரோக்கியமும் மேம்பட்டு குறிப்பாக வலிகளில் இருந்து
விடுபட முடியும் வேறு எந்த மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் இந்த கசாயத்தையும் சேர்த்துக் குடித்து நோயின் பாதிப்புகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
* நீர்முள்ளி கஷாயம் 60 மீ. + தண்ணீர் சேர்த்து காலை மாலை வெறும் வயிறில் உணவுக்கு ஒரிரு மணிநேரம் முன்பு குடிக்கவும்.
* சீந்தில்கொடி எனப்படும் குடூச்சி கஷாயம் மேற்சொன்னவாறே எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பால் முதுக்கன் கிழங்கு எனப்படும் கஷாயம் மேற்சொன்னபடியே எடுக்கலாம்.
* நெருஞ்சில் முள் + சதாவரி
(தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம்.
(தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம்.
★வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.
★முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்துத் தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.
★பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.
★முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
★பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.
★பிண்டத்தைலம் மேலே பூசி, 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
★திரிபலாசூரணம்
காலை, இரவு உணவுக்கு பின் 3 கி சூடான வெண்ணீர்ருடன் உள்ளே சாப்பிடவும்.
கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமன் படுத்தும்.
காலை, இரவு உணவுக்கு பின் 3 கி சூடான வெண்ணீர்ருடன் உள்ளே சாப்பிடவும்.
கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமன் படுத்தும்.
No comments:
Post a Comment