நியூஸ் 18 குணசேகரன் லோனில் வாங்கியுள்ள 2 கோடி ரூபாய் வீட்டிற்கு மாதா மாதம் EMI கட்ட வேண்டும் . அதனால நிர்வாகத்தையும் பகைச்சிக்க முடியாது . அதே சமயத்தில் அவரது மாமனார் கலியன் பூங்குன்றனின் திராவிடர் கழக தொடர்பும் தி மு க சபரீசனிடமிருந்து வரும் பிரஷரும் இருக்கு , இதையெல்லாம் கடந்து நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் உண்மையில் ஆதங்கப்பட்டு பேட்டியெடுத்து அல்லது விவாத நிகழ்ச்சி நடத்தி ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்து நாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் .
இது குணசேகரன் என்றில்லை , நியூஸ் 18 , நியூஸ் 7 , புதிய தலைமுறை , தந்தி என்று எல்லா தொலைக்காட்சிகளுக்கு பொருந்திடும் . இவங்க கடைநிலை ஊடக ஊழியர்களை மதிப்பதில்லை . அவர்களுக்கான உத்வேகத்தையும் கொடுப்பதில்லை . நிர்வாகத்திடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தும் , எச் ஆர் டிபார்ட்மெண்டை கையில் போட்டுக் கொண்டும் , அரசியல் கட்சிகளிடம் பல்லிளித்துக் கொண்டும் நாட்களை கழித்தாக வேண்டும் , இவர்களிடமெல்லாம் , நேர்மை பெருமை எருமை என்று எதிர்பார்ப்புக்களை வைத்துக் கொள்வது நம்முடைய தவறே ….
No comments:
Post a Comment