Wednesday, September 18, 2019

விதிஎதுவோஅதுநடைபெற்றேதீரும்.

பொதுப்பலன்:
திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 2020 சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது.
தனுசு ராசியிலிருந்து தனது ஆட்சி வீடான மகர ராசிக்கு சனி பகவான் செல்கிறாா்.
கும்ப ராசிகாரா்களுக்கு ஏழரை சனி ஆரம்பம்.
விருச்சிக ராசிகாரா்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை.
தனுசு ராசிகாரா்களுக்கு பாத சனி.
ரிஷப ராசிகாரா்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை.
மிதுன ராசி காரா்களுக்கு அஷ்டம சனி ஆரம்பம்.
துலா ராசிகாரா்களுக்கு அர்தாஷ்டம சனி ஆரம்பம்.
தனுசு ராசிகாரா்களுக்கு ஜன்ம சனியிலிருந்து விடுதலை.
அடுத்த மூன்று வருடங்களுக்கு மகர மற்றும் மிதுன ராசிகாரா்கள் அமைதிகாப்பது மிகவும் நல்லது.
உடல்நல சீர்கேடு,முழங்கால் முட்டி வலி,உத்யோகத்தில்,தொழிலில்,வியாபாரத்தில் பிரச்னைகள்,கொடுக்கல்/வாங்கல்களில் பிரச்னைகள்,கணவன்/மனைவி மற்றும் குடும்ப உறவுகளில் பிரச்னைகள்,வண்டி/வாகனத்தில் எதிர்பாரா விபத்துக்கள் முதலியவைகள் ஏற்படலாம்.
புதிய முயற்சிகள்,விரிவாக்கம் முதலியவைகளை தவிர்ப்பது நல்லது.
உடல்நலத்தில் கண்டிப்பாக கவனம் தேவை.
தேவையற்ற மனகசப்புகள்,உளச்சல்கள் ஏற்படலாம்.
பரிகாரம்:அனாதைகளுக்கு,விதவைகளுக்கு முடவர்களுக்கு தாராளமாக உதவுங்கள்.
சவ அடக்கங்களுக்கு உதவுங்கள்.
நல்லெண்ணையை தானம் செய்யுங்கள்.
கோவில்களில் நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.
அருகிலுள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
சென்னைவாசிகள் பொழிச்சலூர் அகத்தீஸ்வரா் கோவிலுக்கு முடியும் போதெல்லாம் சென்று வழிபடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...