Thursday, September 19, 2019

துபாயை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாற்றி வருவதே தமிழர்கள்தான்..

விபச்சார குற்றங்களில் அதிகளவு ஈடுபட்டு காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தமிழர்கள் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது..
குற்றம் சுமத்தப்பட்ட பலர் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர் இன்னும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..
சில தினங்களுக்கு முன்பு இக்கும்பலில் சிக்கிய ஒரு பெண்ணை கடுமையான போராட்டத்திற்கு பின்பு மீட்டு தாயகம் அனுப்பி வைத்ததாக பதிவு செய்திருந்தேன்..
அழகு நிலையம் சூப்பர் மார்க்கெட் வீட்டு வேலை ஊரில் இருந்து எதற்கு கஷ்டப்பட வேண்டும் இங்கு வந்தால் மாதம் ஐம்பாதாயிரம் சம்பளம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து அவர்களின் ஆசையை தூண்டி மூளைச் சலைவை செய்து இங்கு அனுப்பி வைக்கின்றனர்..
அது மட்டும் இல்லாமல் போலியான விசாக்களை இவர்களே தயார் செய்கின்றனர் இப்படி வரும் பெண்கள் விமான நிலையம் வந்தவுடன் அவர்களிடம் இருக்கும் பாஸ்போர்ட் நகைகள் போன் அனைத்தையும் பிடுங்கி கொண்டு தனி ரூமில் அடைத்து வைத்து நேரடியாக விபச்சாரத்தில் தள்ளி விடுகின்றனர்..
இதற்கென்று தனியாக தமிழகத்தில் பெண் ஏஜெண்டுகள் பலர் செயல்பட்டு வருகின்றனர் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளை செய்து பெண்களை துபாய் அனுப்பி வைத்தால் பெண் ஒன்றுக்கு ஒரு லட்சம் வரை கமிஷன் தரப்படுகிறது..
அப்பாவி பெண்களின் கற்புக்களை சூறையாடும் கும்பலின் முக்கிய முதன்மையான குற்றவாளியின் புகைப்படம் கிடைத்துள்ளது இக்கும்பலில் சிக்கிய பெண்கள் எனக்கு வைத்துள்ளனர்..
இவனது பெயர் "கார்த்தி" என்றும் சொந்த ஊர் மயிலாடுதுறை என்றும் கூறுகின்றனர் இது சரியான உண்மையான தகவலா என்று தெரியவில்லை..
மற்றொரு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஏஜெண்ட் புகைப்படமும் கிடைத்துள்ளது சொந்த பாதுகாப்பு கருதி புகைப்படத்தை வெளியிடவில்லை யாருக்கேனும் வேண்டுமெனில் தனிச் செய்தியில் பெற்றுக் கொண்டு உங்களுக்கு தெரிந்தவர்களா என்று சரிபார்க்கவும்...
இங்கு வேலைக்கு வரும் குறிப்பாக பெண்கள் என்ன மாதிரியான வேலை எவ்வளவு சம்பளம் விசா உண்மையானதா அரசு அனுமதி பெற்ற நிறுவனமா நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்பதை இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு நன்கு விசாரியுங்கள்..
இதே நிலை தொடரும் பட்சத்தில் தமிழர்கள் மீதான நம்பிக்கை குறைந்து அனைவரையும் பணி இழக்க செய்து தாயகம் அனுப்பி வைக்கபடுவார்கள்..
நேர்மையாய் சம்பாதிக்க பல வழிகள் இருந்தும் எதற்காக இது மாதிரியான கேவலமான செயலில் ஈடுபட வேண்டும்??
ஒரு சிலரின் தவறான செயல்களுக்கு மொத்த தமிழினத்திற்கும் அவமானம் ஏற்படுகிறது..
இச்செயலை கண்டு சக தமிழனாய் வெட்கப்படுகிறேன் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...