Saturday, December 21, 2019

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர் கின்றன. ஏதேனும் ஒரு போராட்டத்தை தேடிக்கொண்டிருந்த எதிர்க்கட்சி களுக்கு கிடைத்து விட்ட அஸ்திரம் இது.
முத்தலாக் விவகாரம்,காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து பிரச்னை, அயோத்தி தீர்ப்புபோன்றவற்றை, மக்கள் சரியாக புரிந்து கொண்டதால், அரசியல்வாதிகள் அவ்வளவாக தலையிட முடியவில்லை. எனவே அந்த விவகாரங்களில் கிளப்ப முடியாத போராட்டத்தை, குடியுரிமை
விவகாரத்தில் கிளப்பி குழப்பு கின்றன கட்சிகள்.

மதரீதியாக நம் மக்களை பிரிப்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அதற்கு அயோத்தி பிரச்னையில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு தந்து நாட்டை அமைதி பூமியாக்கியது. இப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தின் யதார்த்த அம்சங்களை புரிந்தும் புரியாதது போல் செயல்படும் கட்சிகள், மதநல்லிணக்கத்துடன் வாழும் மக்களை பிரித்தாள போராட்டங்களை துாண்டி விடுகிறது.

அன்று ஆதரித்த காங்கிரஸ்
கடந்த 2003 பா.ஜ., ஆட்சி நேரத்தில், குடியுரிமை சட்டத்திருத்தத்தின் அவசியத்தை பேசியவர் காங்கிரசின் மன்மோகன் சிங். அத்துமீறி குடியேறியவர்களால் எங்களுக்கு ஆபத்து என்று அன்றே முழங்கியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்று 1971 ல் பிரதமராக இருந்த இந்திரா கூறினார்.

எனவே அன்று ஆதரித்த காங்கிரஸ், இன்று வழக்கம்போல் அரசியல் செய்கிறது! போராட்டங்கள் ஊடகங்கள் வழி பரவும் போது, போராட்டக்காரர்களின் பேச்சுக்களை கேட்கும் போது மக்களும் குழம்புகின்றனர்.இப்படியே போனால், இந்தியாவில் இருந்து பிற மதத்தவர்கள் விரட்டப்படுவார்கள் என வதந்திகள் கிளம்புகின்றன. சமூகவிரோதிகள் இப்படி புரளி கிளப்பி குளிர் காய்கிறார்கள். இதனால் தான் இந்த சட்ட திருத்தம் பற்றி, மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.


சட்ட திருத்தம் சொல்வது என்ன


சட்டம் அறியாத மக்களும் புரிந்து கொள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி சில குறிப்புகள்...
* இந்திய குடிமக்களாகிய நமக்கு எதிரான சட்ட திருத்தம் அல்ல. இதற்கும் இந்திய குடிமக்களுக்கும் தொடர்பு இல்லை.

* பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்ட திருத்தம்.

* அந்த மூன்று நாடுகளின் சிறுபான்மையினர் யார்?

ஹிந்து, கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், பார்சி, ஜைனர்.இவர்களுக்கு இந்திய குடியுரிமை
வழங்கினாலும்கூட, குடிமக்களுக்கு இணையான சலுகைகளை சிலரால் பெற முடியாது.
இந்தியாவில் நுழைவதற்காக பொய் சொல்லியிருந்தால் அந்த பொய் பின்னாளில்
கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை தண்டிக்க முடியும்.

இந்த சட்டத்திருத்தத்தில் ஏன் முஸ்லிம்களை சேர்க்கவில்லை?


அவர்கள் அந்த மூன்று நாட்டின் சிறுபான்மையினர் அல்ல.எந்த நாட்டிலிருந்தும் அகதிகளாக, குடியேறிகளாக வரும் சிறுபான்மையினருக்கு சலுகை தர ஐக்கியநாடுகள் சபை வற்புறுத்துகிறது.இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் அந்த நாட்டில் குடியேறச் சென்றாலும், குடியுரிமை கிடைக்காது.

* 2014 டிச.,31க்கு முன்பு இந்தியாவுக்கு யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் மட்டும் இந்த சட்டதிருத்தம் மூலம் பயன்பெற முடியும்.

* இந்த சட்டத்தில் எங்கும் முஸ்லிம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை; ஏனென்றால் இது அந்த 3 நாடுகளில் இருந்து வந்த மத சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகை.

* முஸ்லிம்களை நம் நாட்டில் வரவிடாமல் செய்ய இந்த சட்டம் வழி செய்யும் என்பது ஒரு வதந்தி.மூன்று நாடுகளின் முஸ்லிம் குடிமக்கள், இந்தியாவில் குடியுரிமை கேட்கவோ, அகதியாக வரவோ, அடைக்கலம் கேட்கவோ விண்ணப்பம் செய்வதை இந்த சட்டம் தடுக்கவில்லை.

பொய்கள் என்ன


* குறிப்பிட்ட ஒரு மதத்தினரை இந்திய குடி உரிமை கேட்டு விண்ணப்பிக்கக்கூட
வழியில்லாமல் இச்சட்டம் தடுப்பதாக கட்சிகள் கூறுவது பொய்.

* ''ஹிந்துக்களுக்குத்தான் குடியுரிமை வழங்கப்படும். அல்லாதவர்கள் குடியுரிமை
கோரினால் அவர்கள் ஹிந்துவாக மதம் மாற வேண்டும்; முஸ்லிம்களுக்கு குடியுரிமை
வழங்கப்பட மாட்டாது; இந்திய முஸ்லிம்கள் குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்பப்படு வார்கள்”
என்பது போன்ற திருத்தங்கள் எதுவுமே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் இல்லை.

* குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு தயார் செய்யும் பட்சத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமல் போகும் வாய்ப்புண்டு. ஹிந்துக்களை குடியுரிமைச் சட்டம் காத்து விடும்.
முஸ்லிம்களைபாதுகாக்காது என்பது வதந்தி.

ஏனெனில் குடியுரிமை திருத்தச் சட்டமானது 3 நாடுகளில் இருந்து வந்த மத சிறுபான்மையினருக்கு மட்டும்தான் பொருந்தும்.

சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் யார்?


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிழைப்பு தேடியோ, வேறு நோக்கங்களுக்கோ, சட்டவிரோதமாக குடியேறியுள்ள அந்நாட்டு மத பெரும்பான்மையினருக்குகுடியுரிமை கிடைக்காது.

இந்திய குடிமக்களுக்கு இந்த சட்ட திருத்தத்தால் என்ன நன்மை?
இந்திய குடியுரிமை பெறாத அந்நியர், இந்தியாவில் இருந்து கொண்டே, இந்தியாவுக்கு எதிராக கள்ள நோட்டு புழக்கம், கொலை, கொள்ளை, தீவிரவாதம் என சமூக விரோத செயல்களில்
ஈடுபடுவது இனி தடுக்கப்படும்.

தீவிரவாத நாடுகள்


வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை வாழத்தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் உள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகள் வளர்ச்சியில் மிகவும்
பின்தங்கி உள்நாட்டு குழப்பத்தில் உள்ளன. அதிபராக இருந்த முஷாரப்பை துாக்கில்
தொங்கவிட உத்தரவிட்ட நாடு பாகிஸ்தான்.

ஏற்கனவேபிரதமராக இருந்த பூட்டோ துாக்கிலிடப்பட்டார். தலைவர்களுக்கே இந்த கதி.
அவ்வளவு மோசமான சட்டதிட்டங்கள் உள்ள அந்தநாட்டில் சிறுபான்மையினர் எத்தனை
துயரங்கள் அனுபவித்திருப்பர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.ஆப்கானிஸ்தான் பற்றி கேட்கவே வேண்டாம்...தாலிபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ள நாடு
.
மியான்மரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்யாக்கள், முஸ்லிம்களாக இருந்தபோதிலும், அவர்களால் வங்க தேசத்துக்கு மட்டுமல்ல; தெற்கு ஆசியா
கண்டத்துக்கே பேராபத்து என்று வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்து
இருக்கிறார்.

ஓட்டு அரசியல்
தலைநகர் டில்லி, மேற்கு வங்காளம், கேரளா, பீகார், வடகிழக்கு மாநிலங்களில் அத்துமீறி நுழைந்து வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஓட்டு உள்ளது. இதனால் தான் கட்சிகள் கூப்பாடு போடுகின்றன.இதற்கிடையே கேரளாவிலும், மேற்குவங்கத்திலும்
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அமல் படுத்த மாட்டோம் என்று அம்மாநில
முதல்வர்கள் பினராயிவிஜயனும், மம்தாவும் அறிவித்துள்ளனர்.

அது எப்படி முடியும்?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, குடியுரிமை விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்திற்குஉட்பட்டவை. இந்த விவகாரத்தில் பார்லிமென்ட்டுக்குத்தான் அதிகாரம். மாநிலங்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லை. எனவே ஓட்டுக்காக வேண்டுமென்றால் இப்படி எல்லாம் அரசியல்வாதிகள் பேசலாம்.மெக்சிகோ நாட்டவர் அமெரிக்காவில் அத்துமீறி நுழைவதை தடுக்க, சுவர் எழுப்புவேன் என்று அதிபர் டிரம்ப் சொல்லவில்லையா?

ஏன், இந்திய குடிமக்கள் பிற நாடுகளில் எளிதாக குடியுரிமை வாங்கி விட முடியுமா? எல்லா நாடுகளும் அந்நாட்டின் குடிமக்களின்உரிமையை காக்கவும், பாதுகாப்பாக மக்கள் வாழவும்
சட்டங்கள் இயற்றுவது இயற்கை! இந்தியாவில்சுதந்திரம் பெற்று இத்தனைஆண்டுகளுக்கு பிறகு, இப்போது தான் குடியுரிமை என்பது ஒருசிஸ்டத்திற்குள்' வரப்போகிறது. அதனை மோடி செய்வதால்இத்தனை எதிர்ப்பு!

இந்த சட்டத்திருத்தத்தால் இந்திய குடிமக்களான நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்னும் போது, நாம் ஏன் அபத்தமாக எதிர்க்க வேண்டும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...