இந்த வாரத்தில், 10 பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும், ஏப்ரல் மாதத்துக்குள், இணைப்பு நடவடிக்கைகள் முற்று பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, நான்கு பெரிய வங்கிகளாக மாற்றுவது குறித்த அறிவிப்பை இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு வெளியானதும், வங்கிகளின் நிர்வாக குழுக்கள் கூடி, இணைப்புக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிக்கும்.
மேலும் இந்த, 10 வங்கிகளும் இணைப்பு நடவடிக்கைகளை, ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அசோக் குமார் பிரதான், ''மத்திய அரசு இந்த வாரத்தில் வங்கிகளின் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் பேங்குடன் இணைக்கப்பட உள்ளன.சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்படும். அதேபோல், அலகாபாத் பேங்க், இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படும்.
இதைப் போலவே, ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது.இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பின், பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ., வங்கிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய வங்கியாக உருவெடுக்கும்.கனரா பேங்க், நான்காவது பெரிய வங்கியாக மாறும். யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐந்தாவது பெரிய வங்கியாக உயரும்.

No comments:
Post a Comment