மாஜி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கன்னடம் மற்றம் ஓரிரு தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுமலதா இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:கடந்த சனிக்கிழமை (ஜூலை 4ம் தேதி), எனக்கு தலைவலியும், தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டது.
உடனே கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். சோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதித்த எனது தொகுதியில்ஆய்வு நடத்தியதால் ஒரு வேளை பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, பொதுமக்களின் ஆசீர்வாதம் இருப்பதால் இந்த நோயிலிருந்து வேகமாக குணமடைவேன் இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.
No comments:
Post a Comment