கடந்த 22ம் தேதி கோயமுத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ஒரு பார்சல் ப்ரபஷனல் கொரியர் சர்வீசில் .
23, 24, 25 தேதிகள் ஆகியும் பார்சல் உரியவரிடத்தில் சேர்க்கப்படவில்லை.
இடையில் ஒரு நாள் வணிகர்கள் கடையடைப்பு காரணமாக தாமதமாகி இருக்கலாம் என் நினைச்சு இன்னும் ஒரு நாள் காத்திருந்தேன்.
26ம் தேதியும் டெலிவரி ஆகவில்லை.
கன்சைன்மெண்ட் நம்பர் டிராக் செய்தால் பார்சல் 23ம் தேதியே கள்ளக்குறிச்சி போய் சேர்ந்துவிட்டது ,ஆனால் டெலிவரி ஸ்டேட்டஸ் பெண்டிங் எனக்காட்டுகிறது.
27ம் தேதி இன்று கோயமுத்தூரில் பார்சல் புக் செய்த கொரியர் ஆபீஸ்க்கு போன் செய்து கேட்டால் அட்ரஸ், கன்சைன்மெண்ட் நம்பர் எல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு அம்மா பொறுமையா சொல்றாங்க, அந்த அட்ரஸ்க்கு டோர் டெலிவரி செய்யமுடியாதுங்கன்னு.
ஏம்மா பார்சல் புக் செய்யும்போது இந்த அட்ரஸ் பார்த்துதானே செஞ்சீங்க, அப்பறம் அஞ்சு நாள் கழிச்சு டெலிவரி ஆகலனு கேக்கறப்ப டோர் டெலிவரி செய்யமுடியாதுன்றீங்க, 24மணி நேரத்துல டோர் டெலிவரி செய்யத்தானே கொரியர் சர்வீஸ்க்கு வரோம்? இப்படி சொன்னால் எபப்டினு கேட்டதுக்கு அப்டிதாங்க நீங்க வேணா ப்ரொபஷனல் கொரியர்ல அனுப்பாம இருந்துக்கங்கனு பொறுப்பா பதில் சொல்றாங்க.
இன்னமே உங்க சர்வீஸ் உபயோகிக்க நான் ஒண்ணும் முட்டாள் இல்ல. இப்ப
காசக்குடுத்து நான் அனுப்பிய பார்சல் டோர்டெலிவரி செஞ்சு எனக்கு அங்க இருந்து டெலிவரி ரிப்போர்ட் வர்லன்னா இம்மிடியட்டா கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடுவேன்.
நீங்க இல்லன்னா உங்க ஓனர் இல்லன்னா ரெண்டு பேரும் அங்க வந்து பதில் சொல்லுங்கனு சொல்லிட்டு போனை வச்சுட்டேன்.
காசக்குடுத்து நான் அனுப்பிய பார்சல் டோர்டெலிவரி செஞ்சு எனக்கு அங்க இருந்து டெலிவரி ரிப்போர்ட் வர்லன்னா இம்மிடியட்டா கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடுவேன்.
நீங்க இல்லன்னா உங்க ஓனர் இல்லன்னா ரெண்டு பேரும் அங்க வந்து பதில் சொல்லுங்கனு சொல்லிட்டு போனை வச்சுட்டேன்.
நிஜமா சொல்றேன் என் உடம்பு பூரா அப்டியே கோவத்துல எரியுது. என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?
டோர்டெலிவரி செய்யமுடியாதுன்னா அடுத்தா நாள் சொல்லி இருந்தா அந்தப்பொண்ணு கிட்ட சொல்லி அவங்களே போய் வாங்கிக்கறாப்ல சொல்லி இருக்கலாம். செரி பார்ப்போம்னு இருந்தேன்.
இப்ப 3.30க்கு சங்கீதா போன் செஞ்சு அக்கா, பார்சலை டோர் டெலிவரி குடுத்துட்டாங்க. ஆனா டெலிவரி பாய் கண்டமேனிக்கு திட்டிட்டார்க்கா. எம்பேரு ஜார்ஜ். உங்கள மாதிரி 10 கஸ்டமர்ஸ் டெய்லி பாக்கறோம் எங்க வேணா கம்ப்ளெய்ண்ட் குடுத்துக்கங்க, இன்னமே ப்ரொபஷனல் கொரியர்ல பார்சல் அனுப்பாதீங்கன்னு சொல்லிட்டு போறார்க்கா என சொன்னது.
நான் ப்ரொபஷனல் கொரியர் வெப்டைட்லயும் புகார் பதிஞ்சு இருக்கேன்.
இது நம்ம நண்பர்கள் அறிவதற்காக பதிகிறேன்.
இது நம்ம நண்பர்கள் அறிவதற்காக பதிகிறேன்.
ப்ரொபஷனல் கொரியர்ல இன்னமே யாரும் பார்சல் தபால் எதுவும் அனுப்ப வேணாமாம்ப்பா.
No comments:
Post a Comment