சென்னையில் உள்ள மக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, பொதுமக்களுக்கு மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
வழிமுறைகள் குறித்த விபரம்:
* கபசுர குடிநீர் பொடி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, 15 முதல், 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அது, கால் டம்ளராக வற்றிய பின் வடிகட்டி, குழந்தைகள், 30 மில்லி, பெரியவர்கள், 60 மில்லி, அளவு காலை வேளையில் அருந்த வேண்டும்
* அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும்.
* சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்
* துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன், மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து தினமும், 10 முதல், 15 நிமிடங்கள் நீராவி பிடிக்க வேண்டும்
* சூடான ஒரு டம்பளர் பாலில், ஒரு சிட்டிகை மஞ்சள் துாள், 3 சிட்டிகை மிளகு துாள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து, காலை, மாலை இருவேளை அருந்த வேண்டும்
* இஞ்சி, 5 கிராம், 10 துளசி இலை, மிளகு கால் ஸ்பூன், அதிமதுரம் அரை ஸ்பூன், மஞ்சள் துாள் கால் ஸ்பூன் எடுத்து, 250 மில்லி தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். இந்த இயற்கை மூலிகை டீயை, பெரியவர்கள், 50 மில்லி, சிறிவயர்கள், 20 மில்லி, என, தினமும் இரண்டு வேளை அருந்த வேண்டும்
* வேப்பம் பூ ரசம், துாதுவளை ரசம், மிளகு ரசம், இதில் ஏதேனும் ஒன்றை தினமும் அருந்தலாம்* நாட்டு நெல்லிக்காய் சாறு, 50 மில்லி, - துளசி சாறு, 50 மில்லி- எலுமிச்சை சாறு, 5 மில்லி, இஞ்சி சாறு, 10 மில்லி மற்றும் மஞ்சள் துாள் கால் ஸ்பூனை, 150 மில்லி, தண்ணீரில் கலந்து, இயற்கை பானம் தயாரித்து, பெரியவர்கள், 250 மில்லி, சிறியவர்கள், 100 மில்லி, என்ற அளவில் தினமும் இரண்டு வேளை அருந்தலாம்
* அண்ணாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தவும்
* தினமும், 15 முதல், 20 நிமிடம் வரை, காலை, 7:30 மணிக்குள் அல்லது மாலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் சூரியஒளி குளியல் எடுக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment