'எங்கள் வீட்டுப்பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர். பாடும் பாடலை சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.கடலுார் மாவட்ட தி.மு.க. சார்பில் 'தமிழகம் மீட்போம்' என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமியின் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. பதவிக்காலம் முடியும் முன் அவரது நாற்காலியை கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதிகள் நடந்து வருகின்றன.அந்த பதற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க நித்தமும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். பா.ஜ. தலைமையின் கருணை தனக்கு கிடைக்காதா என தவம் இருக்கிறார். அதனால் தான் எதையும் தாரை வார்க்க தயாராகி விட்டார்.
அவருக்கு மக்கள் எந்தக் காலத்திலும் கருணை காட்ட மாட்டர்கள். அதை சொல்லப்போகும் தேர்தல் தான் அடுத்து நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல்.'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்...' என 'எங்கள் வீட்டுப்பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப்பாட்டு இன்றைக்கு முதல்வர் பழனிசாமியின் கூட்டத்துக்கு பொருந்தும்.இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment