Monday, January 4, 2021

சிறப்பான உண்மை.

 நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில்

சென்று கொண்டிருந்த கார்
திடீரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க.
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது .
தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது.
சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெல்ல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.
இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்து கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?
உற்சாகமானவரா, சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?
இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்.
மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.
உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...