வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அடிப்படையில் உள் ஒதுக்கீடாக 10.5 வழங்கிய வகையில்
அதற்கு எதிராக பலர் நீதிமன்றம் சென்று உள்ளனர் ஆதலால் அந்த விஷயத்தில் அரசு தலையிடவும் மேல் நோக்கி கொண்டு செல்லவும் இயலாது தலையிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் இந்த அரசு
என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ். எஸ் .சிவசங்கரன்அவர்களின் கருத்து என்பது
அவரால் சொல்ல பட்டதா அல்லது தமிழக அரசினுடைய கருத்தா அல்லது தமிழக முதல்வர் அவருடைய கருத்தா தெளிவுபடுத்த வேண்டும் தமிழக அரசு
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கி வருகின்ற 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டில் இருந்து பிரித்து முந்தைய அதிமுக அரசு வன்னியர்களுக்கென உள் இட ஒதுக்கீடாக 10.5 வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளது
இதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றார்கள் நீதிமன்றம் சென்றவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தடையாணையோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக எந்த உத்தரவோ பிறப்பிக்க படாத நிலையில்
அரசு தலையிடுவது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும் அமைச்சர் அவர்களின் கருத்து முற்றிலும் தவறானது
இந்தக் கருத்து அமைச்சரின் கருத்து ஆனாலும் சரி முதல்வரின் சார்பில் வந்த கருத்து ஆனாலும் சரி கருத்து தவறானது நடைமுறைக்கு ஒவ்வாதது
சமூக நீதியைக் காக்கும் பொருட்டு பின் தங்கிய மக்களை மேல்
தூக்கிவிடும் வகையில் மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பு மற்றும் இதர பிரிவுகளில் தனி ஒதுக்கீடு வழங்கி வருகிறது
அப்படித் தனி இட ஒதுக்கீடு வழங்கி நடைமுறைப்படுத்திய
பல்வேறு இட ஒதுக்கீடு விஷயத்தில் அதற்கு எதிராக பலர் நீதிமன்றம் சென்று தான் இருக்கிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில்தான் உள்ளது
ஆனாலும் அரசு அறிவித்தபடி இட ஒதுக்கீடு நடைமுறையில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
நிலைமை இப்படி இருக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் மூலமாக வந்துள்ள கருத்து
"ஜாதிய வன்மத்தின் உச்சமாக
கருதப்படும் வகையில் உள்ளது"
இத்தகைய கருத்து அரசுக்கு தேவையற்ற தர்ம சங்கடத்தை உண்டாக்கும்
மேலும் அமைச்சரின் கருத்து இடைக்காலமாக சில சிறுபான்மை வகுப்பினரின் அற்ப சந்தோஷத்திற்கும் ஊடகங்களுக்கும் தீனியாகுமே தவிர
வன்னியர்களை ஒருபோதும் ஏமாற்றி விட முடியாது
உங்களுடைய கருத்து கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகும்
மேலும் முந்தைய அதிமுக ஆட்சி வழங்கிய 10.5 உள் ஒதுக்கீடு விஷயமாக தேர்தலுக்கு முன்பே நான் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன்
அதில் வன்னியர்களை சாதுரியமாக எடப்பாடி அரசு ஏமாற்றி இருந்தாலோ
அல்லது நியாயப்படி உள் ஒதுக்கீட்டினை கொடுத்திருந்து அதனை
ஆட்சி மாற்றத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு வந்து எடுக்க முற்பட்டாலோ
போராட்டக் களத்தின் மூலம் வெற்றி வாகை சூடி வன்னியர்கள் வரலாறு படைத்து மீண்டும் இட ஒதுக்கீட்டினை பெறுவார்கள் என பதிவிட்டிருந்தேன்
அதற்கான காலமும் நேரமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்
நன்றி வணக்கம் .
No comments:
Post a Comment