Wednesday, June 2, 2021

ஒரு மரணம் ஒரு குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போடக்கூடியது -

 வயதுமுதிர்வாலோ, நீண்ட நாட்கள் வியாதியின் பிடியிலோ இருந்து மரணப்பதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது இருந்தாலும் இழப்பு இழப்புதான் -

ஆனால், எங்கிருந்தோ திட்டமிடும் சில மதவெறியர்களின் வெறிச் செயலால் சம்பந்தமேயில்லாத பல அப்பாவிகள் பலியாவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது -
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையை இங்கே வாழும் உரிமை இருக்கிறது, அதைத் தட்டிப்பறிக்க யாருக்கும் உரிமையில்லை -
அது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் தந்தையாக இருக்கலாம், தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், ஆசைமகனாக, செல்லமகளாக இருக்கலாம் இழந்தவர்களுக்குத்தான் வலி புரியும், இங்கே வாசிப்பவர்களுக்கு புரியாது -
என்னுடைய 20வது வயதில் நான் பார்த்த அந்தக் கொடூரம் 1998 கோவை குண்டுவெடிப்பு-
என் உறவினர்கள் நண்பர்கள் யாரையும் அதில் நான் இழக்கவில்லை, இருந்தும் இன்றுவரை எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட கொடூரம் அது -
சமீபத்தில் சில ஹிந்தி படங்கள், டெலி சீரியல்களில் தமிழாக்கங்களை பார்த்தேன், அதில் சில படங்களைப் பார்க்கும் பொழுது கோவை குண்டுவெடிப்பின் போது ஏற்பட்ட அதே உணர்வு ஏற்பட்டது -
அதில் ஒன்று நாகார்ஜுனா நடித்த #Wild_dog-
இந்தப் படம் இந்தியாவில் 2003 முதல் நடந்த சில உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது-
அதில் நாகார்ஜூனா ஒரு குண்டுவெடிப்பில் தனது ஒற்றைச் செல்ல மகளை இழந்த தந்தையாகவும், ஆக்ரோஷமான NIA அதிகாரியாகவும் நடித்திருப்பார்-
அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் இந்தியாவின் பல நகரங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி பல உயிர்களைக் கொன்றிருப்பான்-
(2003 முதல் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம் 303 உயிர்களைக் கொன்றிருப்பதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது)-
பிறகு, இங்கிருந்து தப்பி நேபாளத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதியை NIA அதிகாரிகள் 5 பேர் மட்டும் சென்று உயிருடன் மீட்டு வந்தனர் இதுதான் கதை-
இதில் குண்டுவெடிப்புகள் உருவாக்கும் துயரத்தை அனுபவிக்கும் ஒரு குடும்பத்தலைவனாக நடித்திருப்பார் -
இதேபோன்றுதான் #Hotel_Mumbai என்ற திரைப்படம்-
மூளைச்சலவை செய்யப்பட்டு பாகிஸ்தானிலிருந்து மும்பை வரும் 10 பேர் கும்பல் எப்படி ஈவு இரக்கமின்றி CS டெர்மினல், தாஜ் ஹோட்டல் போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தி 253 அப்பாவிகளை குருவியைச் சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள் என்பதை விளக்கும் படம்-
இதைப் பார்க்கும் பொழுது அன்று தாக்குதலுக்கு உள்ளான மக்கள் எப்படி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்தார்கள் என்பதையும் எப்படி அவர்களை இந்த மிருகங்கள் விரட்டி, விரட்டி வேட்டையாடின என்பதையும் பார்க்கும் அணைவருக்கும் ரத்தம் கொதிக்கும்-
(தாக்குதல் ஆரம்பித்து 12 மணிநேரங்களுக்குப் பிறகுதான் அங்கே கமாண்டோக்களை அனுப்பி வைத்தது UPA அரசு என்பது கூடுதல் செய்தி) -
இதேபோன்று பல சீரியல்கள், திரைப்படங்கள் அங்கே தைரியமாக எடுக்கிறார்கள்-
URI, Avrodh, The Family man, என்று பல படங்கள் அங்கே இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மையான கோர முகங்களை கிழித்துக்காட்டுகின்றன அதனால்தான் வடஇந்திய ஹிந்தி பேசும் மக்கள் இவர்களை ஆதரிக்கும் கட்சிகளை புறக்கணித்து தொடர்ந்து பா.ஜ.கவை ஆதரித்து மோடி மட்டுமே இவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார்கள்-
ஆனால், தமிழகத்தில் இவற்றையெல்லாம் யாரும் பேசுவது கூட இல்லை, திரைப்படங்களும் நாடகக் காதல் கள்ளக்காதல் எங்களை செருப்பு போடவிடவில்லை, பஸ்ஸில் ஏறவிடவில்லை என்றே எடுக்கிறான்கள் -
வட இந்திய சினிமாக்களைப் போல தமிழகத்திலும் இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வெளிவந்தால்தான் ஓரளவிற்கு இங்கே திராவிட முடைநாற்றம் விலகும் -
நம்முடைய திரைப்படத் தயாரிப்பு குழு இதற்கான முயற்சிகளைச் செய்யும் -
முதல் Project கேரள கன்னிகாஸ்திரி கொலை பற்றியது முடிந்தபிறகு கோவை குண்டுவெடிப்பை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க ஆசை -
இதற்காக நண்பர்கள் கோவை குண்டுவெடிப்பு பற்றி இதுவரை வெளியான புத்தகங்களின் பெயர்கள் ஏதேனும் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும் -
குண்டுவெடிப்பில் உயிரிழந்த 58 பேர்களின் குடும்பங்களும், கை, கால், கண் போன்ற உறுப்புகளை இழந்து நிரந்தர ஊணமடைந்தவர்களும் அவர்களின் குடும்பங்களும் சந்தித்த துயரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...