Wednesday, June 2, 2021

‛மேகி நூடுல்ஸ்' கேடானது: ஒப்புக் கொண்டது ‛நெஸ்லே' நிறுவனம்.

  இரண்டு நிமிடங்களில் தயாராகும், 'மேகி நுாடுல்ஸ்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை, அதை தயாரிக்கும் 'நெஸ்லே' நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது.



latest tamil news



உலகின் பல்வேறு நாடுகளிலும், தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள 'நெஸ்லே' நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில், அடிக்கடி சிக்கி வருகிறது.இருப்பினும், அந்நிறுவன தயாரிப்பான இரண்டு நிமிடங்களில் தயாராகும் 'மேகி நுாடுல்ஸ்', உலகம் முழுதும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியோராலும் விரும்பி உண்ணப் படுகிறது.

இதற்கிடையே, அந்நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதன் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்துஉள்ளனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


அதுமட்டுமின்றி, தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...