Wednesday, June 2, 2021

கொரோனாவை மறந்த கோவை மக்கள்: 'டோக்கன்' வாங்க திரண்டதால் பரபரப்பு.

 கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், 'டோக்கன்' பெற, ஒரே நேரத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொரோனா தொற்று பரவி வரும் இந்நேரத்தில் அதை பற்றி துளியும் கவலைப்படாமல், கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, சங்கனுார் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமாக, ரத்தினபுரியில் ஒரே வளாகத்தில் ஐந்து ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதே பகுதியில் அலுவலகமும் இயங்குகிறது.

கொரோனா,மறந்த ,மக்கள் ,டோக்கன்,  பரபரப்பு

ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, நாளொன்றுக்கு, 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க, 'டோக்கன்' முறை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாய் மற்றும் 13 வகை மளிகை பொருட்கள்
வழங்குவதற்கான டோக்கன் வழங்குவதாக, ரத்தினபுரி பகுதியில் நேற்று தகவல் பரவியது.

உடனே அலுவலகம் முன், அப்பகுதி மக்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்.தொற்று பரவுவதை பற்றி துளியும் கவலைப்படாமல், ஒரே நேரத்தில் 1,000த்துக்கும் மேற்பட்டோர் கூடினர். டோக்கன் கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வரவழைக்கப்பட்டு, 'வீடு வீடாக வந்து, டோக்கன் வழங்கப்படும்; கலைந்து செல்லுங்கள்' என அறிவித்த பின்பே, திரும்பி சென்றனர்.

கூட்டுறவு துறை இணை பதிவாளர் பழனிசாமி கூறுகையில், ''2,000 ரூபாய், மளிகை பொருட்கள் வழங்குவது தொடர்பான உத்தரவு இன்னும் எங்களுக்கு வரவில்லை.''ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான டோக்கனே வழங்குகிறோம்.''ஒரே வளாகத்தில் அதிகமான கடைகள் செயல்படுகின்றன. மூன்று கடைகளை, தற்காலிகமாக பள்ளி வளாகத்துக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...