*துன்பங்கள் என்பது மனித வாழ்வில் சில நேரங்களில் சந்திக்கக் கூடியது... இப்படி நேர்ந்து விட்டதே என்று துவண்டு போகாமல், அதைச் சமாளிக்கும் மனத் தைரியத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்...*
*எந்த முடியாத செயலாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை...*
*நம் வாழ்வில் ஏதாகிலும் நெருக்கடி நிலையைச் சந்திக்கும் போது நிதானமாக யோசித்தால் கண்டிப்பாக அதற்கு தீர்வு புலப்படும் ...*
*என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ.? என்று அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் துன்பம் என்னும் சூழலில் சிக்கித் தவிப்பவர்களாய் நாம் ஆகி விடுவோம்...*
*ஆகவே எந்த நெருக்கடி வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல்பட்டால் நம்மால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியும்...*
*சிந்தித்து செயல்படுவோம்*
*
வாழ்த்துக்கள்
*
No comments:
Post a Comment