40 வருடங்களுக்கு முன், எல்லோரும் தங்களுக்கு குழந்தைகள் வேண்டுமென விரும்பினார்கள்; இன்று பலரும் அதற்கு பயப்படுகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், பிள்ளைகள் பெற்றோரை மதித்தனர்; இன்று, பெற்றோர் பிள்ளைகளை மதிக்க வேண்டியிருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், திருமணம் எளிதாகவும், விவாகரத்து கடினமாகவும் இருந்தது; இன்று, விவாகரத்து எளிதாகவும், திருமணம் கடினமாகவும் இருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், அண்டை வீட்டாருக்கு பரிச்சயமாகியிருந்தோம். இன்று, அண்டை வீட்டாருக்கு புதுமுகமாயிருக்கிறோம்.
40 வருடங்களுக்கு முன், கிராமவாசிகள் வேலை தேடி நகரத்துக்கு வந்தார்கள்; இன்று, நகரவாசிகள் அமைதி தேடி கிராமத்துக்குப் போகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், எல்லோரும் சந்தோஷத்தின் பொருட்டு பருமனாக இருக்க விரும்பினார்கள்; இன்று, ஆரோக்கியத்தின் பொருட்டு, திட்ட உணவு விரும்புகிறார்கள்.
40 வருடங்களுக்கு முன், செல்வந்தர்கள் தங்களை எளியவர்களாகக் காண்பித்தனர்; இப்போதோ, எளியவர்கள் தங்களைப் பணக்காரர்களாக காண்பிக்க விரும்புகின்றனர்.
40 வருடங்களுக்கு முன், ஒட்டுமொத்த குடும்பத்துக்காக ஒருவர் உழைத்தார்; இன்று ஒரு பிள்ளைக்காக ஒரு குடும்பமே உழைக்க வேண்டியிருக்கிறது.
40 வருடங்களுக்கு முன், பலரும் புத்தகங்களை விரும்பிப் படித்தனர்; இன்று, ஜனங்கள் facebook, whatsapp செய்திகளோடு பரபரப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
40 வருடங்கள் 1980, நேற்று போல் தோன்றுகிறது!
யதார்த்தமான அந்த உண்மைகளை நினைத்துப் பாருங்கள். இன்றைய நாளில் அவை, கசப்பான உண்மை!!
No comments:
Post a Comment